Bangladesh Captain Tamim Iqbal Retirement: அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த தமீம் இக்பால்!
வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி லீக் சுற்றில் வெளியேறியது. முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோற்றது இதற்கு முக்கிய காரணம். அன்றைய காலத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட வங்கதேச அணி, இந்தியாவை வீழ்த்தி தனது முதல் வளர்ச்சியை அடைந்தது. அந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தமீம் இக்பால்.
தமிம் இக்பாலின் சிறந்த பார்ம் :
தமிம் இக்பாலின் அரைசதம்தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம். 2007 இல் தொடங்கிய தமீம் இக்பாலின் கிரிக்கெட் பயணம் 16 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் படிப்படியாக உயர்ந்து கேப்டனாக வங்கதேச கிரிக்கெட்டை தோளில் சுமந்தார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அற்புதமாக விளையாடியுள்ளார்.
அவர் 70 டெஸ்ட் போட்டிகள், 241 ஒருநாள் போட்டிகள் மற்றும் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 8,313 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5134 ரன்களும் விளாசி உள்ளார். 3 வகையான கிரிக்கெட்டில் மொத்தம் 25 சதங்கள் அடித்துள்ளார். இதனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பின்தொடர ஆரம்பித்தனர்.
திடீர் ஒய்வு :
திடீரென செய்தியாளர்களை சந்தித்த தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனது தந்தையின் கனவை நிறைவேற்ற கிரிக்கெட் விளையாடினேன். ஓய்வு பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். கடைசி வரை முயற்சித்தேன். என் முயற்சி போதுமா என்று தெரியவில்லை. ஆனால் நான் களத்தில் 100% முயற்சி செய்தேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் வங்கதேச கேப்டன் தமிம் இக்பால் திடீரென ஓய்வை அறிவித்தார். இதனால் பல ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.