Bank Note Press Recruitment 2023 : வங்கி நோட்டு அச்சகத்தில் வேலைவாய்ப்பு...

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பேங்க் வங்கி நோட்டு அச்சகத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸில் வங்கி நோட்டு அச்சகம் இயங்கி வருகிறது. தற்போது, ​​அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கி நோட்டு அச்சகத்தில் கண்காணிப்பாளர், இளநிலை அலுவலக உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 111 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Bank Note Press Recruitment 2023 - பணியிட விவரம்

* பணியிடம்: 111

இதில், சூப்பர்வைசர் (பிரிண்டிங்), சூப்பர்வைசர் (கண்ட்ரோல்), சூப்பர்வைசர் (ஐடி), ஜூனியர் அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன் (பிரிண்டிங்), ஜூனியர் டெக்னீசியன் (கண்ட்ரோல்), என மொத்தமாக 111 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு துறை சார்ந்த ஐடிஐ மற்றும் பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிரிண்டிங் டெக்னாலஜி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் பிஇ மற்றும் பிடெக் முடித்தவர்களுக்கு இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்

சூப்பர்வைசர் (பிரிண்டிங்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.27,600 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.95,910 வரை வழங்கப்படும். அதேபோல், ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18,780 முதல் ரூ.67,390 வரை ஊதியம் வழங்கப்படும். ஜூனியர் அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.21,540 முதல் ரூ.77,160 வரை சம்பளம்.

வயது வரம்பு

அறிவிக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கு விரும்புவோர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21, 2023. மேலும் விவரங்களுக்கு https://bnpdewas.spmcil.com/en/discover-spmcil#career என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளவும்.

Latest Slideshows

Leave a Reply