Barnyard Millet in Tamil : குதிரைவாலி அரிசியின் நன்மைகள் மற்றும் தீமைகள்...

Barnyard Millet in Tamil Name: குதிரைவாலி அரிசி

குதிரைவாலி (அல்லது) புல்லுச்சாமை என அழைக்கப்படும் ஒரு புற்கள் வகையான சிறுதானியம் குதிரைவாலி ஆகும். இவற்றில் எராளமான ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடைங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் எராளமான, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளன. தானியம் என்றாலே பொதுவாக உடலுக்கு நன்மை அளிக்க கூடிய ஒரு உணவு பொருள் ஆகும். தானிய வகையில் குதிரைவாலிக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. குதிரைவாலி அரிசியில் செய்த உணவு வகைகளை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். உடலில் எற்படும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகள் சாப்பிடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

குதிரைவாலி அரிசியின் மருத்துவ பயன்கள் (Benefits of Barnyard Millet in Tamil):

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :

Barnyard Millet in Tamil : சிலருக்கு உடலில் கபம், பித்தம், வாதம் ஆகியவை சரியான அளவில் இல்லாதலால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் எற்படும். இப்படிப்பட்டவர்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி, காய்ச்சல், இருமல் போன்றவை எற்படாமல் தடுக்கும் .

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு :

Kuthiraivali Benefits In Tamil : குதிரைவாலி அரிசில் உள்ள கார்போஹைட்ரேட்டானது வேகமாக செரிப்பதை தாமதப்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் உள்ள குளுகோஸ் அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுவதால் நீரிழிவுநோயாளிகளுக்கு குதிரைவாலி சிறந்த உணவாகவே இருக்கிறது.

சிறுநீர் கோளாறு நீங்க :

Barnyard Millet in Tamil : சிறுநீர் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி தங்களுடைய உணவுகளுடன் குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளையும் சேர்த்து கொள்வதன் மூலம் சிறுநீர் சம்மந்தமான அனைத்து விதமான பிரச்சைனைகளும் நீங்கும். மேலும் இது சிறுநீரை அதிகமாக பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை குறைக்கும்.

செரிமான கோளாறு நீங்க :

Barnyard Millet in Tamil : சிலருக்கு அடிக்கடி செரிமான பிரச்சனை எற்படும், இதனால் அடிக்கடி அவஸ்த்தை படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் குதிரைவாலி அரிசில் செய்த உணவுகளை எடுப்பதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் குதிரைவாலியில் இருக்கும் “ஸ்டார்ச் ரெஸிஸ்டெண்ட்” செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியும்.

குதிரைவாலி அரிசியில் இருக்கும் வைட்டமின்கள் :

Kuthiraivali Benefits In Tamil : வைட்டமின் A , வைட்டமின் C , வைட்டமின் K , வைட்டமின் D போன்ற எண்ணற்ற விட்டமின்கள் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிறைய இரும்பு, கால்சியம், மெக்னிசியம் போன்ற உடலுக்கு ஊட்டமளிக்கக்கூடிய எராளமான விட்டமின்களும் குதிரைவாலியில் காணப்படுகிறது.

குதிரைவாலி அரிசியை எப்படி சமைப்பது :

Kuthiraivali Benefits In Tamil : நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய அரிசியில் சமைக்க கூடிய பொங்கல், உப்புமா, இட்லி, தோசை, கஞ்சி என அனைத்து வகையான உணவுகளையும் குதிரைவாலி அரிசியிலும் சமைக்கலாம். குதிரைவாலி போன்று நம் உடலுக்கு தேவையான அனைத்து வித சக்திகளும் தரக்கூடிய சிறு தானியங்களையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

குதிரைவாலி அரிசியின் தீமைகள் :

வயிற்றுப் புண் இருப்பவர்கள் குதிரை வாலி அரிசியை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் குதிரைவாலி அரிசியானது வயிற்றுப் புண்ணை பெறுக செய்யும். மற்றபடி எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய, அதாவது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய உணவாகவே உள்ளது குதிரை வாலி.

Barnyard Millet in Tamil Name: குதிரைவாலி அரிசி

Latest Slideshows

Leave a Reply