Basil Seeds Benefits : சப்ஜா விதைகள் தரும் அற்புத நன்மைகள்

சப்ஜா விதை சியா விதைகளை போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு விதையாகும். சியா விதைகள் பொதுவாக எடை இழப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதையும் தாண்டி சப்ஜா விதைகள் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை (Basil Seeds Benefits) கொண்டுள்ளது. சப்ஜா விதை துளசி விதை என்றும், திருநீற்றுப்பச்சிலையின் விதை என்றும் பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் பொதுவாக பேசில் விதை (Basil Seeds) என்று சொல்வார்கள். இந்த சிறிய விதை நம் உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. எனவே தினமும் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை சேர்த்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பலன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Basil Seeds Benefits - சப்ஜா விதையின் நன்மைகள் :

ஜீரண ஆற்றல் மேம்பட :

இந்த சப்ஜா விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. செரிமான அமைப்பின் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைத்து ஆரோக்கியமான செரிமான அமைப்பை நமக்குத் தருகிறது.

உடல் எடையை குறைக்க :

சப்ஜா விதைகளில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே இந்த விதையை எடுத்துக் கொண்டால், உடனடியாக வயிறு நிறைந்ததாக (Basil Seeds Benefits) உணர்வு ஏற்படும். உணவில் திருப்தி அடைந்தால், அதிக கலோரிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் உடல் எடையை குறைத்து, கொழுப்பு சேர்வதை தடுத்து எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனவே உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் இந்த சப்ஜா விதையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நீர்ச்சத்துடன் இருக்க :

நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நீரிழப்பு முக்கிய காரணமாகும். நாம் குடிக்கும் தண்ணீர் நமது உள்ளுறுப்புகள் செயல்பட போதுமானதாக இல்லை. அதுமட்டுமல்லாமல், நமது உணவுப் பழக்கவழக்கங்களும் நம்மை நீரிழப்புக்கு ஆளாக்குகின்றன. இந்த சிக்கலை சரிசெய்ய சப்ஜா விதை உங்களுக்கு உதவும். நீங்கள் குடிக்கும் நீரில் சப்ஜா விதைகளைச் சேர்த்துக் குடித்தால், அது உடல் வெப்பநிலையை சமன் செய்து, வெப்பத்தைக் குறைத்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். இது நீண்ட நேரம் நீரேற்றமாக இருக்க முடியும். வெளியில் சென்றாலும் தண்ணீர் பாட்டிலில் அரை ஸ்பூன் சப்ஜா விதைகளை ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் சப்ஜா விதையில் உள்ள நார்ச்சத்து மற்றும் இதர சத்துக்கள் தண்ணீருடன் சேர்ந்து நம் உடலுக்கு கிடைக்கும்.

ஆரோக்கியமான சருமம் பெற :

சப்ஜா விதைகளை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். குறிப்பாக இந்த சப்ஜா விதை வயதான தோற்றத்தைத் தடுக்கவும், சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது :

சப்ஜா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, உடலில் உள்ள நாள்பட்ட பிரச்சனைகளை சரி செய்து, தொற்றுகள் உடலை தாக்காமல் தடுக்கிறது. ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளில் பெர்ரி வகை பழங்களில் இருந்து கிடைக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் இருந்து பெற முடியும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை (Basil Seeds Benefits) கொண்ட விதைகளை உணவுடன் சேர்த்து பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply