Bayamariya Brammai First Look : 'பயமறியா பிரம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பயமரியா பிரம்மை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Bayamariya Brammai First Look) வெளியாகியுள்ளது. இதை இயக்குனரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையான பா.ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஷ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
நந்தா-வி.பிரவீன் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சதீஷ் கவனிக்கிறார். ஒலி வடிவமைப்பை விஜய் ரத்னமும், ஒலிக்கலவை ரஹ்மத்துல்லாவும் செய்கிறார்கள். இந்த க்ரைம் த்ரில்லர் படத்தை 69 எம்எம் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி இணைந்து தயாரித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “படத்தின் கதை 90 மற்றும் 2000-ம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் ‘பயமறியா பிரம்மை’ படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Bayamariya Brammai First Look - 'பயமறியா பிரம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் :
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் (Bayamariya Brammai First Look) கதாபாத்திரங்களின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘பயமறியா பிரம்மை’ இந்தியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளது. மேலும் இப்படம் இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா