BCCI Announced 125 Crores To Indian Team : இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை BCCI வழங்கியுள்ளது

இந்திய அணி ஆனது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்திய அணி T20 உலகக்கோப்பையை வென்றதை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய அணிக்கு BCCI ஆனது ரூ.125 கோடி பரிசுத் தொகை (BCCI Announced 125 Crores To Indian Team) அறிவித்துள்ளது. இந்த உலகக்கோப்பையில் பங்கு பெற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பரிசுத் தொகை ரூ.125 கோடி ஆனது பிரித்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

BCCI Announced 125 Crores To Indian Team - இந்திய அணி பெறுகின்ற பரிசுத் தொகை விவரங்கள் :

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆனது பரிசுத் தொகை ரூ.125 கோடி எவ்வாறு பிரிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களைத் வெளியிட்டுள்ளது. இந்த கணிசமான ரூ.125 கோடி பரிசுத் தொகை (BCCI Announced 125 Crores To Indian Team) வெகுமதியானது, களத்தில் வீரர்களின் சிறந்த செயல்திறனுக்கான சான்றாக மட்டுமல்லாமல், பயிற்சி ஊழியர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் இருந்தவர்களின் முக்கிய பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக தகுதியான பெறுநர்களிடையே பிரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

  • விராட் கோலி, ரோஹித் சர்மாவை உள்ளிட்டோரைக் கொண்ட 15 பேர் அணிக்கும் மற்றும் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டிற்கும் தலா ரூ.5 கோடி வழங்கப்பட உள்ளது.
  • பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோருக்கு தலா ரூ.2.50 கோடி வழங்கப்பட உள்ளது.
  • உதவி பணியாளர்களான 3 பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் மசாஜ் செய்பவர்கள் உள்பட மொத்தமாக 8 பேருக்கு தலா ரூ.2 கோடி வழங்கப்பட உள்ளது.
  • அஜித் அகர்கர் உள்பட தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 கோடி ஆனது வழங்கப்பட உள்ளது.
  • ரிசர்வ் செய்து வைக்கப்பட்ட ஆட்டக்காரர்களான ரின்கு சிங், சுப்மன் கில், ஆகேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
  • ஊடக அதிகாரிகள் மற்றும் தளவாட மேலாளர் போன்ற குழுவுடன் பயணிக்கும் BCCI ஊழியர்களுக்கும் வெகுமதி வழங்கப்பட உள்ளது.

இந்திய அணிக்கு BCCI ரூ.125 கோடி பரிசுத் தொகை அறிவித்ததை (BCCI Announced 125 Crores To Indian Team) தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ₹11 கோடி ரொக்கப் பரிசாக அறிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply