Bcci Announces 58 Crore Prize : சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிப்பு

2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India) 58 கோடி ரூபாய் (Bcci Announces 58 Crore Prize) பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்தத் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. மேலும் பாகிஸ்தானில் விளையாட மறுத்த இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றது. 

குரூப் பி பிரிவில் அரையிறுதி தகுதி சுற்றில் விளையாடிய இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து  அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியையும், கடந்த மார்ச் 9-ம் தேதி துபாயில் நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.

இரண்டு ஐசிசி கோப்பையை வென்ற இந்திய அணி

இதற்குமுன் 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வென்றிருந்தது. இந்நிலையில் தற்போது 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஒரு போட்டியில் கூட (Bcci Announces 58 Crore Prize) தோல்வியடையவில்லை. மிகவும் வெற்றிகரமான அணியாக இந்திய அணி திகழும் நிலையில், டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சாம்பியன்ஸ் டிராபியின் வெற்றிக்காக 58 கோடி ரூபாய் பரிசுத்தொகையை பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது.

பிசிசிஐ அறிக்கை (Bcci Announces 58 Crore Prize)

Bcci Announces 58 Crore Prize - Platform Tamil

சாம்பியன்ஸ் டிராபி சிறிய அளவிலான தொடர் என்பதால் டி20 உலகக் கோப்பைக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட குறைவான (Bcci Announces 58 Crore Prize) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் “2025-ம் ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஐசிசி கோப்பை” என சாம்பியன்ஸ் டிராபியை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குமுன் இந்திய மகளிர் அணி 2025 அண்டர்-19 மகளிர் உலகக் கோப்பையை வென்றிருந்தனர். இதைத்தொடர்ந்து இந்திய ஆடவர் அணி ஐசிசி நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றினர். இதற்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இந்திய அணியை பாராட்டி உள்ளனர். மேலும் ஒவ்வொரு வீரர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை மற்றும் பயிற்சியாளர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Latest Slideshows

Leave a Reply