BCCI Media Rights : இனிமே எல்லாமே ஜியோ தான், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆதிக்கம் முடிவு

BCCI Media Rights :

இனிமேல் இந்தியாவில் நடக்கவுள்ள உள்ளூர் போட்டிகள் அனைத்தும் ஒளிபரப்பும் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமம் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மொபைலில் ஒளிபரப்பும் சேவை ஜியோ சினிமா கைப்பற்றி உள்ளது. தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பும் சேவையை ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் நேற்று நடந்த ஏலத்தில் (BCCI Media Rights) கைப்பற்றியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகள் மற்றும் வெளிநாட்டில் நடக்கும் இந்திய போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகிய அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்து ஒளிபரப்பி வந்தது. ஆனால் கடந்த வருடம் நடந்த சேலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் (BCCI Media Rights) கைப்பற்றியது. ஆனால் டிஜிட்டல் ஒளிபரப்பும் உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில் அடுத்த வருடம் முழுவதும் இந்தியாவில் நடக்க உள்ள உள்ளூர் போட்டிகள் அனைத்தையும் ஒலிபரப்புவதற்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்திய அணி அடுத்த வருடம் மட்டும் சொந்த மண்ணில் 88 போட்டிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டிகளுக்கான ஒளிபரப்பும் உரிமத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற ஏலமே நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு விதமான தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் பங்கேற்றன. டிஸ்னி ஸ்டார், சோனி, ஸ்போர்ட்ஸ் 18 உள்ளிட்ட பல்வேறு பிரபலமான நிறுவனங்களும் இதில் பங்கேற்றனர்.

ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் :

இந்த நிலையில் அடுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்தியாவில் நடக்க உள்ள உள்ளூர் போட்டிகள் அனைத்தையும் ஒலிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இவர்கள் மொத்தமாக ரூ.5,967 கோடிக்கு ஒப்புதல் செய்து இந்த ஏலத்தை கைப்பற்றியுள்ளது. சராசரியாக பார்த்தால் ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 67 கோடி வழங்கியுள்ளது. என்னதான் இவ்வளவு கோடி செலவு செய்து இருந்தாலும் கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இது சிறிது குறைவுதான். கடந்த முறை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ரூ.6,138 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த மதிப்பு குறைந்ததற்கு காரணம் தற்போது இந்தியாவில் விளையாடும் உள்ளூர் போட்டிகளில் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனெனில் ஐசிசி தொடர்களும் ஐபிஎல் போட்டிகளும் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. இதுவே இதற்கான முக்கிய காரணமாகும். இந்த ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை இந்திய மண்ணில் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவன தொலைக்காட்சியிலும் மற்றும் OTT தளத்தில் ஜியோ சினிமா ஆப் மூலம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply