BCCI President Roger Binny : இந்தியா vs பாகிஸ்தான் தொடர் நடைபெறுமா?

BCCI President Roger Binny :

லாகூரில் இருந்து இந்தியா திரும்பிய BCCI President Roger Binny, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு தொடர் நடக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இந்தியா vs பாகிஸ்தான் :

இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ விரும்பாததால், ஹைபிரிட் மாடலில் நடத்தப்படுகிறது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரை நேரில் காண பிசிசிஐ சார்பில் பிசிசிஐ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

இதை ஏற்று BCCI President Roger Binny, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இருவரும் அட்டாரி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர். அங்கிருந்து இருவரும் லாகூர் சென்று ஆசிய கோப்பை போட்டிகளை கண்டு மகிழ்ந்தனர். ரோஜர் பின்னி மற்றும் ராஜீவ் சுக்லா இருவரும் இந்தியா திரும்பினர்.

தனது பாகிஸ்தான் பயணம் குறித்து பேசிய ரோஜர் பின்னி (BCCI President Roger Binny), பாகிஸ்தானில் நாங்கள் மன்னர்கள் போல் வரவேற்கப்பட்டோம். இது சிறந்த பயணங்களில் ஒன்றாக மாறியது. இதன் மூலம் இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு ஒருநாள் தொடர் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை பிசிசிஐ மட்டும் முடிவு செய்ய முடியாது.

இது இரு அரசுகளுக்கும் இடையேயான பிரச்சனை. எனவே அரசு முடிவு எடுக்க வேண்டும். சிறிது காலம் எடுக்கும் என்று நினைக்கிறோம். இன்னும் சில நாட்களில் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி, இந்தியா வரவுள்ளது என்றார். ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியா வரவுள்ளது. பிசிசிஐ அதிகாரிகள் பாகிஸ்தான் பயணத்திலிருந்து திரும்பியுள்ளனர்.

இந்தியா vs பாகிஸ்தான் இடையே கடைசியாக 2006-ம் ஆண்டு இருதரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இந்திய அணி 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சென்றது. பாகிஸ்தான் அணி கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply