Beetroot Juice Benefits in Tamil: ஆரோக்கியம் தரக்கூடிய பீட்ரூட் நன்மைகள் தீமைகள்

Beetroot Juice Benefits in Tamil: உடலுக்கு பல நன்மைகளை தரும் காய்களில் ஒன்று பீட்ரூட் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும் இப்பதிவில் காண்போம்.

பீட்ரூட் நன்மைகள் (Beetroot Juice Benefits in Tamil)

  • பீட்ரூட்டில் இயற்கையாக உள்ள நைட்ரேட்டுகளை நமது மனித உடல் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது. இந்த நைட்ரிக் ஆக்சைட் இரத்த நாளங்களை நன்கு விரிவடையச் செய்து தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
  • உண்மையில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் நமது உடல் இயக்கமும் சீராக இருக்காது, அதாவது நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும், திசுக்களுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தின் மூலமே கிடைக்கிறது. இவைகள் கிடைக்காதபட்சத்தில் ஒவ்வொரு உறுப்பும் சரியாக செயல்பட இயலாது எனவே இந்த பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இரத்த ஓட்டத்தை துரித படுத்தி நம்மை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதே போன்று இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரும்போது உடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேற்றப் படுகிறது.
  • முக்கியமாக இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் ஆண் மலட்டு தன்மையும் நீங்கும். இதில் காணப்படும் வைட்டமின் ஆன்டிஆக்சிடண்ட் ஆகும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த வைட்டமின் சி உடல் செல்களில் நடைபெறும் ஃபிரிராடிகளுக்கு எதிராக பாதுகாப்பது மட்டுமில்லாமல் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாடுகளையும் தூண்டுகிறது. அதே போன்று இதிலுள்ள பீட்டா கரோடின் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

“Beetroot Juice Benefits in Tamil”

  • அடுத்து முக்கியமாக மறதி நோயால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் செயல்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும். இது வயதான காலத்தில் ஏற்படும்  ஒரு தீவிரமான பிரச்சனை ஆகும். அந்த வகையில் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இதிலுள்ள நைட்ரேட்டுகள்  உதவுகிறது. எனவே வாரம் இரண்டு முறை இதை உணவில் சேர்த்து வந்தால் மறதி பிரட்சனை  ஏற்படாது. அதேபோன்று இதில் எந்தவித கொழுப்பும் கிடையாது மிக குறைந்த கலோரிகளையே கொண்டுள்ளது.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பீட்ரூட் சாறினை குடித்து வரலாம் மேலும் இந்த பீட்ரூட் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரை கிளிசரைடை  குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதையும் தடுக்கிறது.
  • கல்லீரல் ஆரோக்கியம், நமது உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்து இரண்டாவது பெரிய உறுப்பு இந்த கல்லீரல் இது சுத்திகரிப்பு தொழிற்சாலை என்றும் கூறப்படுகிறது. காரணம் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள நம்மை செய்ய கூடியவை மற்றும் தீங்கு செய்யக் கூடியவற்றை தரம் பிரிக்கும் முக்கிய பணியை செய்கிறது. எனவே கல்லீரல் செயல்பாடு சரியாக இருக்க அடிக்கடி உணவில் பீட்ரூட் சேர்த்து வருவது நல்லது.

“Beetroot Juice Benefits in Tamil”

  • இரத்த சோகை, இந்த குறைபாடு இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது ஏற்படுகிறது. பொதுவாக நமது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான இரும்பு சத்து, ஃபோலெட், வைட்டமின் பி12 இந்த மூன்று சத்துக்களும் இதில் உள்ளதால் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் வாரம் மூன்று முறை பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை நீங்கி உடல் சுறுசுறுப்பாக மாறும்.
  • பீட்ரூட்டில் பீட்டா கரோடின் நிறைந்துள்ளதால் கண் புரை மற்றும் கண்பார்வை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. அதே போன்று அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். அதே போன்று பீட்ரூட் ஜூஸை வாரம் இரண்டு முறை எடுத்துக்கொண்டு வரும்போது சருமத்தின் நிறம் மெருகேறி பளபளப்புத் தன்மை பெறும்.

பீட்ரூட் தீமைகள் (Beetroot Juice Side Effects)

  • சிறுநீரகக்கல் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை எடுத்துக்கொள்ள கூடாது. காரணம் இது அக்சிலேட்டுகள் நிறைந்தவை இந்த கால்சியம் ஆக்சிலேட் கற்களாக உருவாகும் அபாயம் உண்டு என்று கூறப்படுகிறது. எனவே பித்தப்பை மற்றும் சிறுநீரக கல் உள்ளவர்கள் பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும்.
  • அதே போன்று இதிலுள்ள யூரிக் அமிலமானது உடலில் குவிந்து மூட்டுகளில் தேங்கி மூட்டுகளில் வலியை உண்டாக்கும் என்றும் எனவே ஏற்கனவே மூட்டுவலி மற்றும் கீழ்வாத வலி உள்ளவர்கள் அதிகமாக பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
  • பீட்ரூட் ஜூஸை அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் குரல்வளை சுருக்கம், மூச்சு குழாயில் அலர்ஜி ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போன்று இரத்த அழுத்தம்  குறைவாக உள்ளவர்கள் இந்த பீட்ரூட் ஜூஸ் குடித்தால் மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்துவிடும் என்பதால் குறைந்த  இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிட கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
  • சர்க்கரை நோயாளிகளும் இதை அளவோடு எடுத்து கொள்வதே நல்லது. முக்கியமாக கல்லீரல் பிரட்சனை இருந்தால் பீட்ரூட் ஜூஸை அதிகம் குடிக்க கூடாது. அனைவருமே பீட்ரூட் ஜூஸை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதாவது வாரத்தில் இரண்டு அல்லது  மூன்று நாட்கள் எடுத்துகொள்வதே போதுமானது எனவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த பிட்ரூட்க்கும் பொருந்தும். எனவே பீட்ரூட் ஜூஸை குடிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு குடிப்பது நல்லது.

“Beetroot Juice Benefits in Tamil”

Latest Slideshows

Leave a Reply