BEL Recruitment 2024 : 82 பணியிடங்கள் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

BEL Recruitment 2024 : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா நிறுவனத்தின் சென்னை வளாகத்தில் 82 பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் ‘நவரத்னா’ அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் (Interview) கலந்துக் கொள்ளலாம்.

BEL Recruitment 2024 - Graduate Apprentices பணியிட விவரம் :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா நிறுவனத்தில் Graduate Apprentices பணியிடங்களுக்கு 62 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 01.04.2019-க்குப் பிறகு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  1. சம்பளம் (Salary) : Graduate Apprentices பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.17,500/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL Recruitment 2024 - Technician (Diploma) Apprentices பணியிட விவரம் :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா நிறுவனத்தில் Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 01.04.2020-க்குப் பிறகு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  1. சம்பளம் (Salary) : Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.12,500/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL Recruitment 2024 - B.Com Apprentices பணியிட விவரம் :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : பெல் இந்தியா நிறுவனத்தில் B.Com Apprentices பணியிடங்களுக்கு 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 01.04.2019-க்குப் பிறகு  B.Com படித்திருக்க வேண்டும்.
  1. சம்பளம் (Salary) : B.Com Apprentices பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10,500/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) :

இந்த மூன்று பணியிடங்களுக்கும்  டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை (Application Process) :

இந்த மூன்று பணியிடங்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க,
https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி :

இந்த மூன்று பணியிடங்களுக்கும் 10.01.2024 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Bharat Electronics Limited Nandambakkam Chennai – 600 089

மேலும் விவரங்களுக்கு :

https://www.nlcindia.in/new_website/careers/08-2023.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply