BEL Recruitment In June 2023: பொறியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
BEL Recruitment In June 2023: ரூ. 50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்:
* பயிற்சி பொறியாளர்
* மொத்த காலியிடங்கள்: 205
கல்வித்தகுதி:
* பல்கலைக்கழக மானிய குழு அல்லது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* JAVA மற்றும் php ஆகிய கணினி அறிவை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ளவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படி தளர்வுகள் அளிக்கப்படும்.
மாத ஊதியம்:
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாத சம்பளமாக ரூ. 30,000 வழங்கப்படும். பயிற்சி காலத்திற்கு பிறகு 50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://jobapply.in/bel2023JUNBNG/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.177/- செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24/06/2023.
BEL Recruitment In June 2023: ரூ. 30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இன்ஜினியர், டிரெய்னி இன்ஜினியர் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடம்: 205
பணியிட விவரம்:
* பயிற்சி பொறியாளர் – 191
* திட்டப் பொறியாளர் – 14
தகுதி:
தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஏற்ப்ப துறையில் ( Bsc/ BE/ B. Tech ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது:
28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாத சம்பளமாக ரூ. 30,000 வழங்கப்படும்.
தேர்வுமுறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
* பயிற்சி பொறியாளர் – ரூ. 177
* திட்டப் பொறியாளர் – ரூ. 472
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https:///bel-india.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 24, 2023.