Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

நாம் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் பல வகையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகிறோம். அதுவும் வெயில் காலங்களில் இந்த உடல்நல பிரச்சனைகளை தீர்க்க பலரும் பலவிதமான ஜூஸ்களை அருந்துகின்றனர். இந்த பதிவில் அருகம்புல் ஜூஸ் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் (Benefits Of Arugampul Juice) தெரிந்துக் கொள்ளலாம். கிராமங்களில் வயல் வெளிகளில் வளரும் அருகம்புல் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த அருகம்புல்லை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள புற்றுநோய்கள் குறையும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்கள் குறைந்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Benefits Of Arugampul Juice - அருகம்புல் ஜூஸின் நன்மைகள் :

  • சிறுநீரக பையில் உள்ள கல், உடல் வீக்கம், மூக்கில் இரத்தக்கசிவு, ஜலதோஷம், கண்பார்வை கோளாறுகள், குழந்தைகளுக்கு நாட்பட்ட சளித்தொல்லை, வயிற்று போக்கு, மூளையில் ஏற்படும் இரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இந்த அருகம்புல் வேர் மிகச் சிறந்த மருந்தாகும்.
  • இரத்த புற்றுநோய் குணமடைய, நரம்பு தளர்ச்சி நீங்க, உடல் எடை குறைய, இருமல், வயிற்று வலி, இரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த அரும்புல்லை தினமும் பயன்படுத்தி வந்தால் விரைவில் நோய் குணமாகும்.
  • இந்த அருகம் புல்லில் வைட்டமின் A, K, C, E  போன்ற வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் அருகம்புல் பயன்படுகிறது.
  • தேங்காய் எண்ணெய் மற்றும் அருகம்புல் சாறு இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சிய பிறகு ஆறாத காயங்கள், வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு பத்து போட அவை விரைவில் குணமாகும்.
  • ஒரு கைப்பிடி அளவு அருகம்புல் சேகரித்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பச்சையாக அரைத்து உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு குளித்தால் உடலில் ஏற்படும் அரிப்பு குணமாகும். இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

Latest Slideshows

Leave a Reply