Benefits Of Guava During Pregnancy: கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

பெண்கள் கர்ப்பகாலத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதுவும் குறிப்பாக கொய்யாவில் (Guava) உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகளைத் தருகின்றன. மேலும் கர்ப்பிணிகள் எந்தப் பழங்களைச் சாப்பிட வேண்டும் என்று ஒருமுறைக்கு இருமுறை முதலில் யோசிக்க வேண்டும்.

இதற்கு காரணம் பெரும்பாலான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் சிட்ரஸ் பழங்களில் குறிப்பாக எலுமிச்சை மற்றும் பப்பாளி மற்றும் அன்னாசிப்பழத்தை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யா சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

Benefits Of Guava During Pregnancy: கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்களுக்கும் வளரும் குழந்தைக்கும் போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும். கரு வளர்ச்சிக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்துக்கள் கொய்யாவில் (Guava) நிறைந்துள்ளது.

குழந்தை நரம்பு மண்டலம்

Benefits Of Guava During Pregnancy: கொய்யா பழத்தில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி9 அதிகமாக உள்ளது.  எனவே கர்ப்பகாலத்தில் பெண்கள் இதை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். மேலும் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தையும் மூளை அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கால்சியம் நிறைந்துள்ளது

Benefits Of Guava During Pregnancy: கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்துடன் கால்சியமும் அவசியம். கொய்யா பழத்தில் இயற்கையாகவே கால்சியம் நிறைந்துள்ளது. கொய்யா பழத்தை கர்ப்பகால உணவில் சேர்க்க வேண்டியது அவசியமாகும்.

பார்வைத்திறனை மேம்படுத்துகிறது

Benefits Of Guava During Pregnancy: கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் A ஆனது கர்ப்பிணிகள் மற்றும் குழந்தையின் குருட்டுத்தன்மையைத் தடுத்து பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

Benefits Of Guava During Pregnancy: கொய்யா பழத்தில் வைட்டமின் C நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் கொய்யாவை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கர்ப்ப காலத்தில் எந்த நோய்களும் வராமல் தடுக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

Benefits Of Guava During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் அஜீரணம் மற்றும் செரிமான பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு தீர்வாக கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதுடன் நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

Benefits Of Guava During Pregnancy: புற்றுநோயை தடுக்கிறது

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அவர்கள் கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொய்யாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்த்து போராடும். மேலும் லைகோபீன் மற்றும் வைட்டமின் C உடலில் இருந்து புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களையும் நீக்குகிறது.

Benefits Of Guava During Pregnancy: இரத்த சோகையை தடுக்கிறது

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிக அவசியம் இதற்கு காரணம் ஹீமோகுளோபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க இரும்புச் சத்து தேவைப்படுவதால் கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் தேவையான இரும்புச்சத்து உறிஞ்சப்பட்டு இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

Latest Slideshows

Leave a Reply