Benefits Of Urad Dal : ஊட்டம் தரும் உளுந்தம் பருப்பின் உன்னத நன்மைகள்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் முக்கிய இடத்தில் உள்ள உளுந்தம் பருப்பு ஆனது சுவையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகள் (Benefits Of Urad Dal) தருகின்றது. குறிப்பாக நமது தென் இந்திய உணவுகளான  இட்லி, தோசை மற்றும் மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்தம் பருப்பு ஆகும். நம் உடல் உறுப்புகளை உளுத்துப்போகாமல் புதுப்பித்து தரும் ஆற்றல் உள்ளதால் தா‌ன் இதற்கு உளுந்து என பெயர் வந்தது என்ற காரணப் பெயர் உண்டு. உளுந்தம் பருப்பு ஒரு முழுமையான ஊட்டச்சத்து தொகுப்பு ஆகும். ஆயுர்வேதத்தில் உளுந்தம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

உளுந்தம் பருப்பில்,

  • வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
  • இரும்பு
  • தாமிரம்
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • துத்தநாகம்
  • பொட்டாசியம்
  • பாஸ்பரஸ்
  • ஃபோலிக் அமிலம்
  • கார்போஹைட்ரேட்
  • நார்ச்சத்துகள் உள்ளது.

Benefits Of Urad Dal - உளுந்தம் பருப்பு ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகின்றது

  • அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும் (Benefits Of Urad Dal) உதவுகிறது.
  • உளுந்தம் பருப்பில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில்  உள்ளதால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது. மேலும் உளுந்தம் பருப்பு மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
  • உளுந்தம் பருப்புகளில் புரதம் நிறைந்துள்ளது. சுமார் 25 கிராம் புரதம் இந்த உளுந்தம் பருப்பில் உள்ளது. எனவே சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு நல்ல புரதமாக கருதப்படுகிறது.
  • உடல் கதகதப்பை தக்க வைத்து கொள்ள உளுந்தம் பருப்பு உதவுகிறது. எனவே இந்த உளுந்தம் பருப்பை குளிர்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது ஆகும்.
  • வீடுகளில் பெரும்பாலும் குளிர்காலத்தில் உளுத்தம் பருப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் உடலை வெப்பமடைய செய்வதால் இந்த உளுந்தம் பருப்பை குளிர்காலத்தில் சாப்பிடுவது தொன்று தொட்டு வரும் ஒரு பாரம்பரியம் ஆகும்.
  • மேலும் மலச்சிக்கல், ஆஸ்துமா மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது ஆகும். 100 கிராம் உளுந்தில் கிட்டத்தட்ட 18 கிராம் நார்ச்சத்து உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் மலச்சிக்கலை நீக்கவும் உதவுகிறது.
  • பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மையை உளுந்தம் பருப்பு சரி செய்து, பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்துகின்றது.
  • உடல் கதகதப்பை தக்க வைத்து கொள்ள உதவுவதால் உளுந்தம் பருப்பை குளிர்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • குறிப்பாக ஆண்களுக்கு இந்த உளுந்தம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது குறிப்பாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்னைகள் , குறைந்த விந்தணு எண்ணிக்கை பிரச்சனைகள் மற்றும் இயக்கம் போன்ற பிரச்சனைகளை நன்றாக  குணப்படுத்துகிறது மற்றும் நல்ல நிவாரணம் தருகிறது.  
  • மேலும், உளுந்து உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. ஏனெனில், உளுந்தம் பருப்பில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும்.
  • நம் உடலில் உள்ள யூரிக் அமில அளவை உளுந்தம் பருப்பு கணிசமாக உயர்த்துவதால் சிறுநீரக கற்கள், பித்தப்பை சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் அத்தியாவசியமானது.

Latest Slideshows

Leave a Reply