Bepicolombo Picture Of Mercury's South Pole : பெபிகொலம்போ விண்கலம் மெர்குரியின் தென் துருவத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளது

பெபிகொலம்போ திட்டமானது இரண்டு விண்கலங்கள் ஒன்றாக இணைந்து புதன் (Mercury) கிரகத்தை சுற்றி வருவதையும், ஆய்வு செய்வதையும் உள்ளடக்கிய ஒரு சர்வதேச பயணமாகும். புதன் கிரகத்தின் காந்தப்புலம், அதன் மேற்பரப்பின் புவியியல் மற்றும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்பு ஆகியவற்றைப் ஆராய்ச்சி செய்வதே பெபிகொலம்போவின் முதன்மையான பணியாகும். பெபிகொலம்போ திட்டத்தின் மூலம் முதல்முறையாக புதனின் (Mercury) தென் துருவப் படம் பூமிக்கு (Bepicolombo Picture Of Mercury’s South Pole) கிடைத்துள்ளது. பெபிகொலம்போ (Bepicolombo) என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகிய இரு நாடுகளின் கூட்டுப் பயணமாகும்.

இந்த மிஷன் செப்டம்பர் 5  2024 அன்று புதன் கிரகத்தின் நான்காவது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இறுதி சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டு விண்கலம் புதன் (Mercury) கிரகத்தை நெருங்கிச் சென்றது. பெபிகொலம்போ விண்கலத்தின் முக்கியமான சுற்றுப்பாதை உயர்வின் போது அனைத்து அமைப்புகளும் நன்றாக செயல்பட்டதாக மிஷன் கன்ட்ரோலர்கள் தெரிவித்துள்ளனர். புதனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 165 கிலோமீட்டர் தொலைவில் பெபிகொலம்போ விண்கலம் கடந்து சென்றது.

Bepicolombo Picture Of Mercury's South Pole - முதல்முறையாக மெர்குரியின் தென் துருவப் படம் :

பெபிகொலம்போ விண்கலத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் எடுக்கப்பட்ட ஒரு பிரம்மிப்பூட்டும் படம் மெர்குரியின் தென் துருவத்தின் விவரங்களை தெளிவாக காட்டுகிறது. பெபிகொலம்போ விண்கலம் புதனின் (Mercury) மேற்பரப்பில் சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது வரலாற்று சிறப்புமிக்க இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. புதன் கிரகத்தின் இறுதி சுற்றுப்பாதை உயர்வுக்கு பின் 23 நிமிடங்கள் கழித்து எடுக்கப்பட்டது. சூரிய குடும்பத்தில் உள்ள நான்கு பாறை உள் கிரகங்களில் இதுவரைக்கும் புதனில் மிகக் குறைவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பெபிகொலம்போ விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படம் (Bepicolombo Picture Of Mercury’s South Pole) புதன் கிரகத்தைப் பற்றி நமது புரிதலுக்கும் மேலும் பல ஆய்வு செய்வதற்கும் அதுமட்டுமல்லாமல் உந்துதல் சிக்கல்கள் காரணமாக வரும் நவம்பர் 2026ல் திட்டமிடப்பட்டுள்ள புதன் சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்துவதற்கான பணிகளுக்கு உதவும் என்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply