Best Performer State in Startup India 2022 List : Startup India 2022-ன் சிறந்த செயல்திறன் கொண்ட மாநில பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்

Best Performer State in Startup India 2022 List :

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 16/03/2024 அன்று ஸ்டார்ட்- அப் விருதுகள் மற்றும்  2022-ம் ஆண்டிற்கான மாநில தரவரிசை விருதுகள் பிரிவில் 5 மாநிலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் இந்தியா தரவரிசை பட்டியல் ஆனது  Top performer, Best performer,  Top Leaders, Offspring leaders மற்றும் Emerging States என ஐந்து  பிரிவுகளில் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ‘சிறந்த செயல்திறன்’ பிரிவில்  விருதுகள் பெற்றன. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விருதுகளை வழங்கினார்.

தமிழ்நாடு ஆனது 7 சீர்திருத்தப் பகுதிகள் :

  • நிறுவன ஆதரவு
  • நிதி ஆதரவு
  • செயல்படுத்துபவர்களின் திறன் மேம்பாடு

ஆகிய மூன்றில் அதிகபட்சமாக 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட தமிழ்நாடு ஆனது அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது. 2018இல் கடைசி இடத்தில் இருந்த  தமிழ்நாடு இந்தளவுக்கு முன்னேறியதற்குச் சரியான சூழலை மாநில அரசு உருவாக்கிக் கொடுத்ததே காரணம் ஆகும். தமிழக அரசு 2021-இல் தமிழ்நாடு தனது Nodal Startup ஏஜென்சியான StartupTN ஐ புதுப்பித்தது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிதியை மிகச் சரியாகப் பயன்படுத்தியது.

தமிழ்நாடு  தனது  பட்ஜெட்டில்  பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் புத்தொழில் தொடங்குவதற்கான நிதியை உயர்த்தியது. (TANSEED புத்தொழில் ஆதார நிதி) முறையான மானியங்கள் கிடைக்கத் தடையாக இருந்த சரளங்களைத் திறந்துவிட்டது. புதிய நிதிகளை அறிமுகப்படுத்துதல். தொழில்முனைவோரை முதலீட்டாளர்களுடன் இணைக்கும் நெட்வொர்க்குகளை உருவாக்குதல். உலகளாவிய அளவில் தொடர்பு ஏற்படுத்தித் தருதல் –  LaunchPad நிகழ்வுகள் எனப் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டதன் அடையாளமாகவே இந்தத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை எட்டிப்பிடித்து.

தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது

  • தற்போது தமிழ்நாட்டில் 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன.
  • இந்த 7600 StartUp நிறுவனங்களில்  2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • தமிழக அரசு TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம் LaunchPad நிகழ்வுகள் என மறுசீரமைப்பு முயற்சிகள் எடுத்துள்ளது.
  • SC / ST பிரிவுக்கு தமிழ்நாடு மட்டுமே நிதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டை தவிர
    வேறு எந்த மாநிலத்திலும் நிதி வழங்குவதில்லை. இது தமிழ்நாட்டை  தனித்து நிற்க வைத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply