Bethlehem Christmas Celebration 2023 : இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

25/12/2023 இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நள்ளிரவு 12 மணி அளவில் தொடங்கி நடைபெற்றன.  மக்கள் அனைவரும் உலக அமைதிக்காக தேவ மைந்தனிடம் பிரார்த்தனை செய்தனர். தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை – சாந்தோம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, கொடைக்கானல், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களின் குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு திருப்பலி நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பிரார்த்தனை ஆனது சர்வதேச அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் தேவாலயத்தில்  சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் பங்கேற்றனர். மக்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போன்ற போர்கள் நடைபெறும் இந்த நேரத்தில் தேவ மைந்தனிடம் நல் வாழ்விற்காகவும் உலக அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்தனர். இயேசுவின் பொன்மொழியான “புறாக்களை போல கபடமில்லாமல் இருங்கள்” என்பதை பிரதிபலிக்கும் பொருட்டு, ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு இன்று அன்பை பகிர்ந்துக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர், இனிப்பு, புத்தாடை, அன்பு மொழி பரமாரிக்கொண்டு கொண்டாடி வருகின்றனர்.

Bethlehem Christmas Celebration 2023 - பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன :

உலகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக சிறப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததாக கருதப்படும் பெத்லகேமில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (Bethlehem Christmas Celebration 2023) ரத்து செய்யப்பட்டுள்ளன. பெத்லகேமில் உள்ள தேவாலய பாதிரியார்கள் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த கொண்டாட்டங்களை (Bethlehem Christmas Celebration 2023) ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளனர். சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாஸ்தீனியர்கள் மற்றும்  குழந்தைகள் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரை இந்த இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தேவாலய பாதிரியார்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மேலும் தேவாலய பாதிரியார்கள் இயேசு இன்று பிறந்திருந்தால் அவர் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்திருப்பார் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2023-ஆம் ஆண்டில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், உக்ரைன்-ரஷ்யா போர், உலக பொருளாதாரம், கோவிட் தொற்று, சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் மற்றும் சாதிய, மத, இன மோதல்கள் ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

பெத்லஹேமின் மேயர் ஹனா ஹனியேஹ், “Dec 25 கிறிஸ்துமஸ் அன்று ஒவ்வொரு ஆண்டும் எங்களின் செய்தி அமைதி மற்றும் அன்பின் செய்தியாகும், ஆனால் இந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் பகுதியில் என்ன நடக்கிறது என்பது சர்வதேச சமூகத்தின் முன் சோகம், துக்கம் மற்றும் கோபத்தின் செய்தி  ஆகும்” என்று கூறினார். பெத்லஹேமின் வருவாயில் 70% சுற்றுலாவைக் கணக்கிடும் கிறிஸ்மஸ் பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டமை பெத்லகேமின் பொருளாதாரத்திற்கு கடுமையான அடியாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாரும் வருகை இல்லை. பெத்லஹேமில் உள்ள 70 ஹோட்டல்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பண்டிகை விளக்குகள் மற்றும் பொதுவாக மேங்கர் சதுக்கத்தை அலங்கரிக்கும் கிறிஸ்துமஸ் மரம் காணவில்லை. கிறிஸ்மஸ் ஈவ் அன்று பரிசுக் கடைகள் மெதுவாகத் திறக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் வேலையிழந்துள்ளனர்.

பெத்லகேமின் தெருக்களில் இளம் சாரணர்கள் அவர்களின் பாரம்பரிய இசை அணிவகுப்புக்குப் பதிலாக கொடிகளுடன் அமைதியாக நின்றனர். உள்ளூர் மாணவர்களின் குழு மௌனமாக பாரிய பாலஸ்தீனக் கொடியை ஏந்தியது. பெத்லகேமில் கிறிஸ்துமஸ் ஈவ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டதை அடுத்து, பொதுவாக பரபரப்பான இயேசுவின் விவிலிய பிறந்த இடம் 24/12/2023 இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு பேய் நகரத்தை ஒத்திருந்தது. “நாங்கள் அமைதியின் இளவரசர் இயேசு வருவதற்காக காத்திருக்கிறோம். நாங்கள் இந்த போரை இயேசு நிறுத்த ஒரு அதிசயத்திற்காக காத்திருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply