Bhai Sleeper Cells Poster: இஸ்லாமிய சர்ச்சையை கையில் எடுத்த படக்குழு

புர்கா, ஃபர்ஹானா, தி கேரளா ஸ்டோரி என தொடர்ந்து இந்த சீசன் இஸ்லாமியா படங்களின் சீசன் என்கின்ற அளவுக்கு இயக்குனர்கள் தொடர்ந்து இஸ்லாமிய கதைகளை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த பட்ஜெட் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ஆதவா ஈஸ்வர்’ படங்களில் இணைந்து நடித்து வருகிறார். ஆதவா ஈஸ்வர் தற்போது “பாஸ் – ஸ்லீப்பர் செல்ஸ்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

“பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்து, கிறிஸ்டியன் மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்களை வைத்து வெளியிட்டுள்ளார் அருள் நிதி. ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்திலேயே ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ என இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் “பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்” என்ற தலைப்பு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்தப் படம் என்ன கதை சொல்லப் போகிறது, என்ன சர்ச்சையை ஏற்படுத்தப் போகிறது என முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்குகிறார். கேஆர்எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஆதவா ஈஸ்வர், ஸ்ரீ நியா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இசைமைப்பாளர் ஜித்தன் கே ரோஷன் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டைட்டில் பாய் என இருந்தாலும் போஸ்டரில் தலையில் குல்லா அணிந்து கொண்டும் , நெற்றியில் திருநீறு பட்டை போட்டுக் கொண்டும், கையில் சிலுவையை வைத்துக்கொண்டும் ஆதவா ஈஸ்வர் டெரர் லுக் கொடுத்துள்ளார். மேலும் மதம் ஒரு அரசியல் போர்கருவி என்கின்ற வாசகமும் இடம்பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் ஏகப்பட்ட மத சர்ச்சைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வந்தால்தான் படம் உண்மையில் என்ன சொல்ல வருகிறது என்பது புரியும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply