Bharatiya Antariksha Station Operated By Robot : பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை இயக்கப்போவது ரோபோ தான் என அறிவிப்பு

Bharatiya Antariksha Station Operated By Robot :

இந்தியா வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை Bharatiya Antariksha Station (BAS) தொடங்குவதற்கான இஸ்ரோவின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் இந்த லட்சிய திட்டத்திற்கான வடிவமைப்பு தொகுதிகள் அனைத்தும் தயார் ஆகி வருவதாகவும் செயல்பாட்டுக்கு வந்தவுடன் முதலில் ‘பாரதிய அந்தரிக்ஷா விண்வெளி நிலையம்’ ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் எனவும் பிறகு அங்கு இந்திய விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வார்கள் (Bharatiya Antariksha Station Operated By Robot) எனவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். பாரதிய அந்தரிக்ஷா விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டின் ஆரம்ப கட்டம் முழுவதும் ரோபோக்களால் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாகும் எனவும் தெரிவித்தார்.

ககன்யான் திட்டம் (Gaganyaan Project) :

இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விண்வெளி நிலையத்தில் இரண்டு வீரர்களை விட்டு சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தால் பாதிக்கவில்லை என்றும் இஸ்ரோ தலைவர் சோமநாத் உறுதிப்படுத்தினார். மேலும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக ககன்யான் திட்டப்பணிகள் தாமதமாகிறது எனவும் ககன்யான் திட்டமிட்டபடி வரும் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

சந்திரயான் 4 திட்டம் (Chandrayaan 4 Project) :

நிலவின் மேற்பரப்பிற்கு சென்று அங்கு இருக்கும் மண் மற்றும் சிறு கற்களை எடுத்து வருவதற்கான திட்டமே சந்திரயான்-4 திட்டமாகும். இத்திட்டத்திற்கு 2,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகள் வரும் 2040 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் இந்தியாவின் திறனை நிரூபிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். சந்திரயான்-4 திட்டத்திற்கு பிறகு இந்தியா நிலவில் நிரந்தர வசிப்பிடத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது எனவும் அதற்காக தற்போது என்ஜிஎல்வி (NGLV) ஏவுகணை வாகனங்கள் சுமந்து செல்லும் திறனை 10 டன்னில் இருந்து 30 டன்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இது நம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திறனை கணிசமாக மேம்படுத்தும் எனவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply