Biggest Solar Storm Hit The Earth : புவியை தாக்கும் பெரிய சூரிய புயல் - நாசா எச்சரிக்கை

சூரியனில் சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய சூரிய புயல் (Biggest Solar Storm Hit The Earth) ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் பூமியை நோக்கி வரும் நிலையில் நமது கிரகத்தை தாக்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் விரைவில் இந்தியாவை தாக்கலாம் என்றும் நாசா ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மனிதர்கள் வாழும் இந்த பால்வெளி மண்டலத்தில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சூரிய குடும்பத்தில் நடக்கும் மாற்றம் நமது பூமியை நேரடியாக பாதிக்கும். இதனால்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரிய குடும்பத்தில் நடக்கும் மாற்றங்களை மிக உன்னிப்பாக கவனித்து தகவல்களை வழங்கி வருகிறார்கள்.

சூரிய புயல் (Solar Storm) :

சூரிய புயல் என்பது சூரியனில் ஏற்படுகின்ற திடீர் வெடிப்புகள் ஆகும். மேலும் இந்த சூரிய புயலின்போது அதிலிருந்து காந்தபுலங்கள், துகள்கள், ஆற்றல் போன்றவை பெரியளவில் வெளியேறி நமது பூமியை தாக்கும். இதனால் எலக்ட்ரானிக் சாதனங்கள், தொலைத்தொடர்பு, சாட்டிலைட்கள் மொத்தமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  

Biggest Solar Storm Hit The Earth - இந்தியாவுக்கு எச்சரிக்கை :

மேலும் இந்த சூரிய புயலை (Solar Storm) இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். மேலும் இந்த புயல் சோலார் சாட்டிலைட்களை அதிக அளவில் பாதிக்கும் என்பதால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு செயற்கைக்கோள் ஆப்ரேட்டர்களுக்கு இஸ்ரோ தகவல் அனுப்பியுள்ளது. இஸ்ரோ வல்லுநர்கள் இது தொடர்பாக கூறுகையில் இந்த சூரிய புயல் பூமியை நெருங்குவதால் அடுத்து சில நாட்கள் மிக கடினமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இது மிகவும் வலிமையானதாக உள்ளது.

தற்போது பூமியை நோக்கி வேகமாக பயணித்து கொண்டு வருகிறது. மேலும் நம் காந்த மண்டலத்தில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும். மேலும் இந்த சூரிய புயல் பூமியை தாக்குவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் புயல் எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லும் எனவும் அதேசமயம் புவியை தாக்கினால் பூமியின் காந்தப்புலம் பெரியளவில் பாதிக்கப்படும். மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என உறுதியாக சொல்ல முடியாது என இஸ்ரோ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply