Bill Gates Donation Percentage : பில் கேட்ஸ் 99 சதவீத சொத்தை மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது 162 பில்லியன் சொத்தில் 99 சதவீத சொத்தை தானமாக வழங்கப்போவதாக (Bill Gates Donation Percentage) அறிவித்து உள்ளார். மீதமுள்ள 1 சதவீத (1.62 பில்லியன்) மட்டுமே தனது குழந்தைகளுக்கு என ஒதுக்கி உள்ளதாக பில் கேட்ஸ் கூறியுள்ளார். உலக புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர் பில் கேட்ஸ். அதன் மூலம் அவர் ஒரு மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். இவரது Windows OS நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் முறையே மாற்றி அமைத்தது. இவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.

இவர் 1994-ம் ஆண்டு மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் என்பவரை திருணம் செய்து கொண்டார். பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியரின் குழந்தைகள் மூவரின் பள்ளிப் படிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் விவாகரத்து பெறுவதாகச் சொல்லி உலகிற்கே ஷாக் கொடுத்தனர்.

Bill Gates Donation Percentage - Platform Tamil

மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill Gates Donation Percentage)

இவர் கம்ப்யூட்டர் துறையையும் தாண்டி தனது தொண்டு நிறுவனம் மூலம் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். அவர் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் இதுபோன்ற நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்.

ப்ளூம்பெர்க்கின் தற்போதைய மதிப்பீட்டின்படி பில் கேட்ஸ் சொத்தின் நிகர மதிப்பு 162 பில்லியனாக உள்ளது. அந்த 162 பில்லியன் சொத்தின் ஒரு சதவீதம் ஆனது 1.62 பில்லியன் ஆகும். இது இந்திய ரூபாயின் மதிப்பீட்டின்படி சுமார் ரூ.13,500 கோடியாகும். இந்த 1.62 பில்லியன் தொகை அவரது மூன்று குழந்தைகளுக்கு சமமாகப் பிரித்துத் தரப்படும். பில் கேட்ஸ் தனது செல்வத்தில் இந்த ஒரு சதவீதத்தை மட்டுமே தனது குழந்தைகளுக்கு ஒதுக்கி விட்டு 99 சதவீதத்தை தானமாக வழங்கப்போவதாக அறிவித்து உள்ளார். அவர் தனது குழந்தைகள் தன் மூலம் செல்வத்தைப் பெறுவதை விடச் சொந்தமாக வெற்றியை பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்பட்டுத் தலைசிறந்த கல்வியையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் 69 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து யோசித்து முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது குழந்தைகள் பெரிய செல்வத்தை அடைவதை விட தங்கள் சொந்தப் பாதைகளை உருவாக்கி தாங்களாக தங்களது வெற்றியை அடைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply