மிகப் பிரமாண்டமாய் நடந்த Bilt Rewards CEO Ankur Wedding

Bilt Rewards CEO Ankur Wedding :

Bilt Rewards, CEO அங்கூர் ஜெயின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் அமெரிக்க கோடீஸ்வரர் ஆவார். இவர் முன்னாள் WWE மல்யுத்த வீராங்கனையான (EX-WWE) எரிக்கா ஹம்மண்ட் ஐ திருமணம் செய்திருக்கிறார். இவர்களது திருமணம் எகிப்தில் மிகப் பிரமாண்டமாய் (Bilt Rewards CEO Ankur Wedding) நடந்துள்ளது. அங்கூர் ஜெயின் அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கிறார். எரிக்கா 2013ம் ஆண்டு WWE NXT DIVAவாக அறிமுகமானவர். எரிக்கா ஃபிட்னெஸ் நிறுவனம் ஒன்றை லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடத்தி வந்திருக்கிறார்.

பின்பு எரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து குடிபெயர்ந்து நியூயார்க் சென்றிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள Rumble Boxing என்கிற பிரபலங்களுக்கென பிரத்யேகமான ஜிம்மில் கோச்சராக செயலாற்றியிருக்கிறார். அங்கூர் ஜெயின் Rumble Boxing ஜிம்மில்தான் எரிக்காவை சந்தித்திருக்கிறார். அந்த Rumble Boxing ஜிம்மில் அங்குரின் ஃபிட்னெஸ் கோச்சர் எரிக்காதான். இருவருக்கும் அந்த Rumble Boxing ஜிம்மில்தான் காதல் மலர்ந்தது.

அங்குர் எகிப்தில் தன் திருமணத்தை மிகப் பிரமாண்டமாய் நடத்தி முடித்திருக்கிறார் :

இவர்களது திருமணம் 2022ம் ஆண்டே நிச்சயக்கப்பட்டது. இருந்தபோதும் இருவரும் தங்கள் திருமணத்தை மிகப் பிரமாண்டமாய் நடத்தவேண்டும் என்று விரும்பினர். அதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தார்களாம். அங்குர் ஜெயின் விண்வெளியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது ஆசையை எரிக்காவிடம் தெரியப்படுத்தினார். அதைக்கேட்ட அவர் திருமண நாள் அன்னிக்கே என்னைய சாகடிக்க பாக்கறியா என்று பீதியாகி பயந்து மறுத்துவிட்டாராம். அதனால்தான் அங்குர் தன் திருமணம் ஒரு புதிய உலகில் நடக்க வேண்டும் என்ற ஆசையில் பிரமிடுகள் சூழ்ந்த எகிப்த்தை தேர்வு செய்திருக்கிறார்.

அங்குர் ஜெயின் தன் நண்பர்கள், உறவினர்கள் என 130 பேரை எகிப்திற்கு அழைத்துச் சென்று பிரமிடுகளுக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி தன் ஆசைக் காதலியான எரிக்காவை திருமணம் (Bilt Rewards CEO Ankur Wedding) செய்திருக்கிறார். இந்திய டிசைனரான ராகுல் மிஸ்ரா எரிக்காவின் திருமண ஆடையான கௌனை தங்கத்தினால் வடிவமைத்துள்ளார். அங்குர் திருமணத்தை பார்க்கச் சென்ற 130 பேருக்கும் 3 நாள் ஆப்பிரிக்கன் சஃபாரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  சஃபாரியின் வாடகை ஒரு நாளைக்கு ஒருவருக்கு 1.65 லட்ச ரூபாய் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply