Bio-CNG Manufacturing Project : தமிழகத்தில் Bio-CNG தயாரிக்கும் திட்டம்

தமிழகத்தில் 2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நீர்வளம், பசுமை ஆற்றல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு தனிக் கவனம் செலுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பசுமை ஆற்றல் துறையில் புதிய ஹைட்ரோ-எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குப்பைகளில் இருந்து உயிரி எரிவாயு (Bio-CNG), அதாவது பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் ஆனது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

6 மாநகராட்சிகளில் அமல்

தற்போது பயோ கேஸ் (Bio-CNG) தயாரிக்கும் திட்டதிற்காக தாம்பரம், மதுரை, கோவை, நாகர்கோவில், சேலம், திருச்சி ஆகிய 6 மாநகராட்சிகள் ஆனது தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பயோ கேஸ் (Bio-CNG – உயிரி எரிவாயு) தயாரிக்கும் திட்டம் ஆனது தூய்மை இந்தியா திட்டம் 2.0ன் கீழ் தொடங்கப்படுகிறது. இந்த பயோ கேஸ் (Bio-CNG – உயிரி எரிவாயு) தயாரிக்கும் திட்டதிற்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 288 கோடி ஆகும்.

மேற்குறிப்பிட்ட தாம்பரம், மதுரை, கோவை, நாகர்கோவில், சேலம், திருச்சி ஆகிய 6 மாநகராட்சி நகரங்களில் உயிரி எரிவாயு திட்டம் முறையாக மற்றும் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் நாள் ஒன்றுக்கு 600 டன் குப்பைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு அதிக அளவில் பயோ கேஸ் தயாரிக்கப்படும். தற்போது இந்த திட்டமானது சென்னையில் மூன்று தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் புதிதாக ஒரு தளம் ஆனது கொடுங்கையூரில் வரப் போகிறது. 

குடிநீர் விநியோகத் துறையின் செயலாளர் டி.கார்த்திகேயன் பயோ கேஸ் எடுக்கும் திட்டம் குறித்து உரை

குடிநீர் விநியோகத் துறையின் செயலாளர் டி.கார்த்திகேயன் பேசியபோது, “ஒவ்வொரு மாவட்டங்களிலும் குப்பைகளில் இருந்து பயோ கேஸ் எடுக்கும் மையங்கள் கட்டாயம் கொண்டு வரப்படும். இந்த பயோ கேஸ் (Bio-CNG – உயிரி எரிவாயு) மூலம் உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் ஈட்டும். இவை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, ஒவ்வொரு கிலோ பயோ கேஸிற்கும் 1.5 ரூபாய் மாநகராட்சி ராயல்டி ஆனது பெற முடியும். ஒரு கிலோ உணவுப் பொருள் குப்பையில் 0.5 கியூமிக் மீட்டர் பயோ கேஸ் தயாரிக்க முடியும். மக்கள் வீடுகளில் சமையல் செய்வதற்கு பயோ கேஸை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தளங்கள் ஆனது எந்தவித தடையின்றி செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றது. தற்போதைய சூழலில் சிறிய நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த மிகப்பெரிய அளவில் குப்பைகளை பிராசசிங் செய்யும் இடவசதி தேவைப்படுகிறது. புறநகர்ப் பகுதியில் தற்போது போதிய அளவு இடம் இல்லை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இடமே இல்லை எனக் கூறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இடவசதிக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து தந்தால் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.” என்று கூறினார்.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Jai ganesh

    Your words are powerful and have the ability to make a real difference in people’s lives Keep using your voice to spread positivity and knowledge

Leave a Reply