Bison Release Date : பைசன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ திரைப்படம் தீபாவளிக்கு (Bison Release Date) வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா துறையில் முன்னணி இயக்குநராக திகழ்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது பைசன் படத்தை இயக்கி வருகிறார்.
பைசன்
கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு பைசன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பசுபதி, லால் ரஜீஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், கலையரசன், அழகம்பெருமாள் உள்ளிட்ட பலரும் (Bison Release Date) இப்படத்தில் நடித்துள்ளனர். பைசன் படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதனுடன் இணைந்து தீபக் சேகல், அதிதி ஆனந்த் தயாரித்துள்ளனர். எழிலரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி திரு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பெரும்பகுதி திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றியே படமாக்கப்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் தமிழ்த் திரையுலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதை மாரி செல்வராஜின் படங்களில் காணப்படும் சமூக சாதிப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.
பைசன் ரிலீஸ் தேதி (Bison Release Date)
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த (Bison Release Date) நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக வெளியாக உள்ளது.
இது குறித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில்,
தீப்பிடித்து எரியும்
வனத்திற்குள்ளிருந்து
தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான்
தெக்கத்தி காளமாடன் (பைசன்) என்று பதிவிட்டுள்ளார்.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?