Blinkit 10 Minute Ambulance Service : பிளிங்கிட் நிறுவனம் 10 நிமிட ஆம்புலன்ஸ் டெலிவரி சேவையை அறிமுகம் செய்துள்ளது

முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளிங்கிட் நிறுவனம் இந்தியாவில் 10 நிமிட ஆம்புலன்ஸ் டெலிவரி சேவையை (Blinkit 10 Minute Ambulance Service) அறிமுகம் செய்துள்ளது. இனி பொதுமக்கள் அவசர மருத்துவ சேவைக்கு ஊபர் டாக்ஸி, ஆட்டோ, ஓலா டாக்ஸி போன்றவற்றை தவிர்த்துவிட்டு மொபைல் போன் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்களை சில வினாடிகளில் புக் செய்யும் விதமாக பிளிங்கிட் நிறுவனம் பிளிங்கிட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த பதிவில் இந்த பிளிங்கிட் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் சேவைக்கு அந்நிறுவனம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது? மற்றும் இந்த சேவை இந்தியாவில் எங்கு அணுக கிடைக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

குருகிராமில் தொடங்கப்பட்டுள்ளது (Blinkit 10 Minute Ambulance Service)

கடந்த மாதம் வரை பிளிங்கிட் நிறுவனம் மளிகை பொருட்கள் மற்றும் பிரின்ட் அவுட் போன்ற பொருட்களை மட்டுமே டோர் டெலிவரி செய்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் யாரும் எதிர்பார்த்திடாத அளவுக்கு  குருகிராமில் பிரைவேட் ஆம்புலன்ஸ் புக்கிங் சேவையை துவங்கியுள்ளது. தற்போது குருகிராமில் மட்டும் இந்த 10 நிமிட ஆம்புலன்ஸ் டெலிவரி சேவை கிடைக்கும் (Blinkit 10 Minute Ambulance Service) என்றும் விரைவில் இந்த சேவை இந்தியாவின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திந்த்சா கூறியுள்ளார். மேலும் இந்த 10 நிமிட ஆம்புலன்ஸ் சேவை லாபத்தை நோக்கமாக கொண்டு தொடங்கப்படவில்லை எனவும் மக்கள் தங்களின் அவசர தேவைக்கு மொபைல் மூலம் புக்கிங் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

2000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது

பிளிங்கிட் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ்களில் அட்வான்ஸ் லைஃப் சப்போர்ட் கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஸ்ட்ரெச்சர், அதிநவீன மானிட்டர், தானியங்கி எக்ஸ்டர்னல் டிஃபிரிலேட்டர், உறிஞ்சும் இயந்திரம், அத்தியாவசிய அவசர மருந்துகள் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் (Blinkit 10 Minute Ambulance Service) பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் துணை மருத்துவர் அவருக்கு உதவியாக ஒரு உதவியாளர் மற்றும் பயிற்சி பெற்ற டிரைவர் என மூன்று நபர்கள் இருப்பார்கள் என பிளிங்கிட் நிறுவன தலைமை அதிகாரி கூறியுள்ளார். மேலும் எக்ஸ் தளத்தில் அல்பிந்தர் திந்த்சா பகிர்ந்துள்ள தகவலின்படி இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply