BMW CE 04 Electric Scooter : BMW Motorrad நிறுவனம் ரூ.14,90,000 விலையில் Electric Scooter அறிமுகம் செய்கிறது

BMW Motorrad நிறுவனம் ரூ.14,90,000 விலையில் BMW CE 04 Electric Scooter அறிமுகம் செய்கிறது :

இந்தியாவில் BMW Motorrad நிறுவனம் ஆனது முற்றிலும் தனித்துவமான தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் BMW CE 04 Electric Scooter மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகன தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த BMW CE 04 வாகனத்தை BMW Motorrad நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

இது ஒரு பிரீமியம் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதுவே இந்தியாவில் BMW Motorrad நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், எந்தவித தடங்கலும் இன்றி 130 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். இதனை நகர்புற பயன்பாட்டிற்கு தகுந்த வாகனமாக BMW தயார் செய்திருக்கிறது. இது தொழில்நுட்பம், அதிக வேகம், அதிக ரேஞ்ஜ் என அனைத்திலும் சிறந்த தயாரிப்பு ஆகும்.

BMW CE 04 அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட Electric Scooter :

இந்த வாகனத்தை BMW Motorrad நிறுவனம் வாட்டர் பைக் மற்றும் ஸ்கேட் போர்டு ஆகியவற்றின் ஸ்டைலை ஒத்துப் போகும் வகையிலேயே வடிவமைத்து இருக்கின்றது.

  • BMW CE 04 Electric Scooter-ரில் திரவ-குளிரூட்டப்பட்ட மின்சார மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்சார மோட்டார் 42 hp power-ரை அதிகபட்சமாக வெளியேற்றும்.
  • இதன் Top Speed மணிக்கு 120 km ஆகும். மேலும், வெறும் குறைவான 2.6 வினாடிகளிலேயே 0 km வேகத்தில் இருந்து 50 km வேகத்தை எட்டும். இது அதிக ரேஞ்ஜை வழங்கும்.
  • இதில் 8.5 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆனது பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனத்தை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதனை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக 2.3 kw Home Charger வழங்கப்படுகிறது.
  • இந்த 2.3 kw Home Charger வாயிலாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் 3 மணி நேரம் 30 நிமிடங்களில் 0% முதல் 80% சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும்.
  • சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்குகளும் மற்றும் பின்புறத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கும் உள்ளது. Anti-lock Braking System மற்றும் Automatic Stability Control உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளது.
  • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பக்கவாட்டு பகுதியில் சேமிப்பு அறை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆவணங்கள் மற்றும் செல்போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக இந்த பெட்டக அமைப்பு இருக்கின்றது.
  • மேம்பட்ட பாதுகாப்பிற்காக சக்தி வாய்ந்த LED விளக்குகள் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

முதல் கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த BMW CE 04 Electric Scooter விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ.14 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த BMW CE 04 Electric Scooter டெலிவரி பணிகள் செப்டம்பர் 2024 இல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை நகர்புற பயன்பாட்டிற்கு தகுந்த வாகனமாக BMW Motorrad நிறுவனம் தயார் செய்திருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply