Boat Movie Review : போட் திரைப்படத்தின் திரை விமர்சனம்

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள போட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி? இருக்கிறது (Boat Movie Review) என்பதை தற்போது காணலாம். தமிழ் சினிமாவில் நகைச்சுவை பட இயக்குநர்கள் மிக குறைவாகவே உள்ளனர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சிம்புதேவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது அடுத்த படம் திரைப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. புலி படத்திற்கு பிறகு ரசிகர்களை பெரிய அளவில் திரும்பி பார்க்க முடியாமல் தவித்த சிம்புதேவனை போட் கரை சேர்த்ததா? என்பதை பார்க்கலாம்.

படத்தின் மையக்கருத்து :

இரண்டாம் உலகப்போர் ஒருபுறம், சுதந்திரப் போராட்டம் மறுபுறம் என 1943-ம் ஆண்டு நடக்கும் கதைக்களமாகும். ஹிட்லருக்கு ஆதரவாக இருந்த ஜப்பான், வெடிகுண்டு மழை பொழிந்து மற்றவர்களை அச்சுறுத்தி வரும் சூழலில், சென்னை கடற்கரையில் உள்ள வெள்ளையர்களின் முகாம் மீது வெடிகுண்டு வைக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. இதனால், மக்கள் பீதியில் ஓடுகின்றனர். அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும், அவனது பாட்டியும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படகில் கடலுக்குள் தப்பிச் செல்கின்றனர்.

அப்போது 6 பேர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படகில் ஏறினர். நடுக்கடலில் உயிருக்கு பயந்து பயணித்த 9 பேர் எதிர்கொண்ட ஆபத்துகள் என்ன? அந்த பேரிடரில் இருந்து தப்பிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன? படகில் இருந்த தீவிரவாதி யார்? ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விலங்கு இயல்பு எப்படி அவர்களை வாழ்வதற்காக மாற்றுகிறது? எப்படி அந்த தீவிரவாதியிடம் இருந்து எப்படி தப்பித்தனர்? என்பதை 2.30 மணி நேர படமாக கொடுத்துள்ளார் சிம்புதேவன்.

Boat Movie Review :

சிக்கலான கதைக்களத்தில் சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் சிம்புதேவன். யோகி பாபு, ஒரே ஒரு படகில் குமரனாக வந்து தனது அசத்தலான மற்றும் யதார்த்தமான நடிப்பால் நம்மைக் கவர்கிறார். யோகி பாபுவுக்குப் பிறகு எம்.எஸ்.பாஸ்கரின் நூலகர் கதாபாத்திரம் தான் படத்தில் முக்கியமான கதாபாத்திரம். நடுக்கடல், படகு என்ற ஒரே இடத்தில் சலிப்பின்றி கதைக்களத்தை நகர்த்துவதில் உரையாடலின் பங்கு மிக முக்கியமானது. 1943ல் நடந்தாலும் இன்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இவர்கள் பேசும் வசனங்கள் பேசுகின்றன.

படத்தின் முதல் பாதியில் வசனங்கள்தான் படத்தைத் தாங்கி நிற்கின்றன. இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் இன்றும் மக்களிடையே நிலவும் சாதி மற்றும் மத வேறுபாடுகள் பற்றி பேசியுள்ளார். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்த நிலையில், இரண்டாம் பாதியில் உயிரைக் காப்பாற்ற யோகிபாபு என்ன நிபந்தனைகளை விதிக்கிறார்? அவருடைய நிபந்தனைக்கு மற்றவர்கள் சம்மதித்தார்களா? இறுதியில் அவர்களின் முடிவு என்ன? அதை இன்னும் சுவாரசியமாக்கி கதையை முடித்திருக்கிறார் சிம்புதேவன். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா, கௌரி கிஷன், சாம்ஸ், லீலா மற்றும் சின்னி ஜெயந்தி என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். இசைமைப்பாளர் ஜிப்ரான் அற்புதமான பின்னணி இசையை கொடுத்துள்ளார். ஆக மொத்தத்தில் படம் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply