Breastfeeding Awareness 2023: நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் சேய் இருவரும் நலம்...

Breastfeeding Awareness 2023 :

உலகம் முழுவதும்  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை தாய்ப்பால் விழிப்புணர்வுக்காக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்த குழந்தைக்கு, குழந்தை பிறந்த சிறிது நேரத்திலிருந்து ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும்.  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது ஆரோக்கியமான வாழ்வை அளிக்கிறது.

குழந்தையின் முதல் 6 மாதங்களுக்கு பிறகு ப்யூரிட் அல்லது திட உணவுகளை அறிமுகப்படுத்த American Academy Of Peadiatrics சொல்கிறது. இதனால் தாய்ப்பாலுடன்  இணை உணவுகளும் அவசியம்.

குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும் :

ஒரு வருடத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுத்தால் அது ஊட்டச்சத்து கொண்டிருக்கவில்லை என்பது உண்மை அல்ல. தாய்ப்பாலில் உள்ள கொழுப்பு, புரதம், வைட்டமின் A,  கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால் குழந்தைகள் நல்ல பயனடைவார்கள்.

ஒரு வருடத்துக்கு கொடுக்கும்  முதல் தாய்ப்பாலில் கொழுப்புகள் (கொலஸ்ட்ராம்)  நிறைந்திருக்கும். இது பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரு வருடத்துக்கு பிறகு தாய்ப்பாலில் உள்ள கொழுப்புகள், புரதம் மற்றும் ஆற்றல் உள்ளடக்கம் கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

பிரசவித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படும் மனித பாலில் கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. சிறு குழந்தைகளில் அதிகரித்து வரும் ஆற்றல் தேவைகளுடன்  இந்த பால்  தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

நீண்ட காலம் (2 வயது வரை) தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் :

பல நாடுகளில் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் அளிப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

இது மன அழுத்த சூழ்நிலையில் குழந்தையை அமைதிப்படுத்தும். வம்பு செய்யும் குழந்தையின் கவனம் திசை திருப்பப்படும்.  குழந்தைக்கு வம்பு செய்யும் நேரத்தில் ஆறுதல் அளிக்கும் மற்றும் வலியையும் குறைக்கும்.

குழந்தை வருத்தப்படும் போதும், காயப்படும் போதும் மன அழுத்தத்தை உண்டு செய்யும் நேரங்களிலும் அவர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும்.

தாய்ப்பால் குடித்த குழந்தைகள் குறைவான அழுகையை கொண்டிருந்ததாக 2018 ஆம் ஆண்டு காக்ரேன் மதிப்பாய்வு கூறுகிறது.

இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இணைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். குழந்தை வெறித்தனத்துடன் இருந்தாலும் அவர்களை சமாதானப்படுத்த உதவும். குழந்தை அமைதியாக இருக்கும் மற்றும் நிம்மதியாக உணரும்.

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும், 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில்  இரண்டு வயது வரை தாய்ப்பால்  குடித்த குழந்தைகளுக்கு பள்ளி வயதில் அதிக IQ இருந்தது கண்டறியப்பட்டது.

குழந்தைகளுக்கு நோய் ஆபத்து குறையும் மற்றும் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி செய்யும்.

நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள் :

பொதுவாக குழந்தைக்கு முதல் பிறந்தநாள் முடிந்த கையோடு தாய்ப்பால் மறக்க செய்கிறார்கள்.

அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு கல்லூரியியல் கூற்றுப்படி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கிறது.

ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி நீண்ட காலம் குழந்தைக்கு தாய்ப்பால்  கொடுப்பதால், 

  • மார்பக புற்றுநோய்
  • கருப்பை புற்றுநோய்
  • எண்டோமெட்ரியோசிஸ் புற்றுநோய்
  • டைப் 2 நீரிழிவு நோய்
  • உயர் இரத்த அழுத்தம்
  • இதயநோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்

போன்ற நோய்களின் அபாயத்தை குறைவாக பெறுகிறார்கள்.

இதய ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கிறது என்று  அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு கல்லூரியியல் கூறியுள்ளது.

குழந்தை பிறந்த பிறகு 1 வருடம் கழிந்த நிலையிலும் தாய்ப்பால் கொடுக்கும் போது பிரசவ சுருக்கங்களுக்கு காரணமான ஆக்ஸிடாசின் மற்றும் சில ஹார்மோன்கள் வெளியாகிறது. மேலும் இந்த ஹார்மோன்கள் தாயை அமைதிப்படுத்தும். மன அழுத்த எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது.

1 வருடம் கழிந்த நிலையிலும் தாய்ப்பால் கொடுக்கும் போது கார்டிசோல் மற்றும் இரத்த அழுத்தம் குறையும் .

நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பதால்​ தாய் மற்றும் சேய் இருவரும் நலம் பெறுவார்கள்.

Latest Slideshows

Leave a Reply