Brian Lara : எனது சாதனைகளை இந்திய வீரர் கில் முறியடிப்பார்

Brian Lara :

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்களும், கவுண்டி கிரிக்கெட்டில் 500 ரன்களும் எடுத்த தனது சாதனையை முறியடிக்கும் திறன் இந்திய அணியின் கில்லுக்கு இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் Brian Lara தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் கில். இளம் வயதிலேயே இந்திய அணியின் 3 வடிவங்களிலும் கிரிக்கெட் வீரராக வலம் வந்துள்ளார். அதுமட்டுமின்றி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு இணையான சூப்பர் ஸ்டார் வீரராக கில் திகழ வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் உலகமும் எதிர்பார்க்கிறது.

அதன்படி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சாதனைகளை கில் படைத்து வருகிறார். நடப்பு ஆண்டில் மட்டும் 6 சதங்கள், 9 அரைசதங்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மாற்றப்பட்டதால், குஜராத் அணியின் கேப்டனாக 24 வயதில் கில் நியமிக்கப்பட்டுள்ளார். எண்ணற்ற சாதனைகளை படைத்து வரும் கில் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் Brian Lara பேசுகையில், எனது இரண்டு சிறந்த சாதனைகளை முறியடிக்கக்கூடிய வீரராக கில்லை பார்க்கிறேன். புதிய தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் கில். எண்ணற்ற சாதனைகளை முறியடிப்பது உறுதி.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் கில் சதம் அடிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் ஏற்கனவே விளையாடிய இன்னிங்ஸைப் பாருங்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என்பது வெற்றிகரமான இன்னிங்ஸ் ஆகும். இனிவரும் ஐசிசி தொடரில் நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கில் கூறினார். 1994ல் டர்ஹாமுக்கு எதிராக வார்விக்ஷயர் அணிக்காக விளையாடிய Brian Lara, கவுண்டி கிரிக்கெட்டில் 501 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல், இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் Brian Lara எடுத்த 400 ரன்களே இன்றுவரை தனிநபர் பெற்ற அதிகபட்ச ஸ்கோராகும். கில் அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply