Brinda Trailer Release : த்ரிஷா நடிக்கும் ப்ருந்தா வெப்சீரிஸின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகை த்ரிஷா நடித்து வரும் ப்ருந்தா வெப்சீரிஸின் ட்ரெய்லர் (Brinda Trailer Release) வெளியாகியுள்ளது.

Brinda Trailer Release - த்ரிஷாவின் ப்ருந்தா :

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, 24 வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்துடன் இன்றும் ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து இளம் ஹீரோயின்களுக்கு சவால் விட்டு வரும் த்ரிஷா தற்போது ப்ருந்தா என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸில் த்ரிஷா போலீஸ் எஸ்.ஐ.யாக நடித்துள்ளார். இந்நிலையில், ப்ருந்தா வெப்சீரிஸின் ட்ரெய்லர் (Brinda Trailer Release) வெளியாகியுள்ளது.

இந்த வெப்சீரிஸ் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாக உள்ளது. வெப்சீரிஸ் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து நடக்கும் கொலைகள், மாந்திரீகம் போன்றவற்றின் பின்னணியைக் கொண்ட இந்த வெப்சீரிஸில் படித்து நேரடியாக எஸ்.ஐ. பொறுப்பில் இருக்கும் த்ரிஷா, தன் சக போலீஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை எதிர்த்து எவ்வாறு இந்த கொலை வழக்கை கையாளுகிறார் என்பதுதான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த வெப் சீரிஸில் த்ரிஷாவுடன் பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ஆமனி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மௌலி ஆகியோர் நடித்துள்ளனர்.

நேரடியாக தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸை சூர்ய மனோஜ் வங்காளா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஆஷிஷ் கொல்லா தயாரித்துள்ள வெப்சீரிஸுக்கு தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்வர் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் கதாநாயகியாக அசத்திய த்ரிஷா, தற்போது அவர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அஜித்-த்ரிஷா ஜோடியின் லேட்டஸ்ட் போட்டோவை விடாமுயற்சி படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், OTT-யில் த்ரிஷா நடித்த வெப்சீரிஸ் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

Latest Slideshows

Leave a Reply