Bro Telugu Movie Review: சமுத்திரக்கனியின் BRO | டோலிவுட்டில் கலக்கும் சமுத்திரக்கனி...

தமிழில் ’வினோதய சித்தம்’ :

தமிழில் சமுத்திரக்கனி தான் இயக்கி நடித்த இப்படத்தை, தெலுங்கில் நடிகர் பவன் கல்யாணை வைத்து இயக்கியுள்ளார். இப்படம் டோலிவுட்டில் தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முன்னதாக சமுத்திரக்கனி சார், தசரா, விமானம் ஆகிய தெலுங்கு படங்களின் மூலம் ரசிகர்களின் கவனமீர்த்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு சமுத்திரக்கனி தம்பி ராமைய்யா, சஞ்சிதா ஷெட்டி, தீபக் உள்ளிட்ட பலர் நடித்த ’வினோதய சித்தம்’ ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்  சமுத்திரக்கனியும், தம்பி ராமையாவும் நடித்து ’வினோதய சித்தம்’ வெளியாகி நன்கு வரவேற்பைப்  பெற்றது.

Bro Telugu Movie Review :

தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண், நடிகர் சாய்தரம் தேஜ்  மற்றும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, ரோகிணி, ப்ரியா பிரகாஷ் வாரியர், யுவலக்‌ஷ்மி, தனிகெலா பரணி  ஆகியோர்  நடித்துள்ளனர். தற்போது பெரிய பட்ஜெட்டில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் ‘ப்ரோ’.

பவன் கல்யாண் என்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பது மாஸ், டான்ஸ், ஃபைட். இப்படத்தில் அது இருக்காது, பவன் கல்யாணிக்கான விஷயங்கள் எதுவும் இல்லாத இப்படியொரு கதையில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகவே பவன் கல்யாணை பாராட்டலாம். 

இப்படத்தில் அவரது  பழைய பட பாடல்களைப் போட்டு ரசிகர்களிடம் கனெக்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். பவன் கல்யாண்  ரிலாக்ஸாக நடித்திருக்கிறார்.

தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.  பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம்  ஶ்ரீநிவாஸ் இப்படத்துக்கு திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியிருக்கிறார்.,

இப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியானது. தமிழில் இருந்த அதே திரைக்கதைதான் பெரிய மாற்றங்கள் இல்லை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்த Tamil Version -ஷனை 2 மணி நேரம் 15 நிமிடங்களாக மாற்றியிருக்கிறார்கள்.

எல்லோரும் பரபரப்பாக திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் இலக்கை நோக்கி, வெற்றியை நோக்கி, கடமைகளை நோக்கி என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வளவு அவசரம் தேவையில்லை, இருக்கும் வாழ்க்கையை நிம்மதியாக வாழ், யாருக்காகவும் இங்கு எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை. இதை யார் செய்வார் நாம் இல்லையென்றால் கவலை கூடாது போன்ற விஷயங்களை இந்த ‘ப்ரோ’ சொல்கிறார்.

Bro Movie - ஒரு பார்வை :

ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் சாய் தரம் தேஜ் வேலை, வேலை  ஒரு நாளுக்கு 24 மணி நேரம் போதவில்லை என பரபரவென பிஸியாக இயங்கும் இளைஞன்.  வீட்டில் தம்பி,  தங்கை  படிப்பு, வேலை, திருமணம் என எல்லா கடமைகளுக்கெல்லாம் தான் மட்டும்தான் சொந்தக்காரன் தான் மட்டும்தான்  முடிக்க தெரியும் தனக்கு  தான் எல்லாம் தெரியும்.

‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ ‘சொல்றதை மட்டும் கேளுங்கள்’ என்ற மனநிலையில் இயங்கும் கடமைச்செல்வனான மார்க்கண்டேயலு, ஒரு சாலை விபத்தில் இறக்கிறார்.

உடலைவிட்டு அவரது ஆன்மா போய்க்கொண்டிருக்கும் வழியில், மனித உருவில் இருக்கும் நேரத்தைச் சந்திக்கிறது.

பவன் கல்யாண் அந்த நேரத்திடம் கெஞ்சிக் கேட்டு, தன் கடமைகளை முடிக்க மீண்டும் சாய் தரம் தேஜ் பூலோகம் வருகிறார்.

அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 90 நாள்கள் கால அவகாசத்தில் தான் முடிக்க நினைத்த கடமைகளை முடித்தாரா இல்லையா, இதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

காலம் அவருக்கு சொன்ன பாடம் என்ன என்பதை ஃபான்டஸ்டிக்காக சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி.  சாய் தரம் தேஜ் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார்.

இப்படம், தற்போது தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply