BSF Recruitment 2024 : பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள தலைமை கான்ஸ்டபிள், உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (BSF Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1526 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளவும். இந்திய ராணுவத்தின் எந்தப் பிரிவிலும் சேர விரும்பும் இளைஞர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் சர்வதேச எல்லைகளை பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாக எல்லைக் காவல் படை செயல்பட்டு வருகிறது. இந்திய துணை ராணுவப் படையின் ஒரு பிரிவாகக் கருதப்படும் இந்தப் படை, 1965 டிசம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது தவிர, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தப் பிரிவின் முக்கியப் பணி எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும் ஆகும். தற்போது, ​​எல்லைப் பாதுகாப்புப் படையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் (BSF Recruitment 2024) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்ன தகுதிகள் உள்ளன? எப்படி விண்ணப்பிப்பது? என்பதை பற்றி இங்கு காணலாம்.

BSF Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

  • பணி : உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர், BSF, CRPF, ITBP, CISF, SSB, AR உள்ளிட்ட பிரிவுகளுக்கு இந்த வேலைவாய்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • கல்வித் தகுதி : இதற்கு விண்ணப்பிக்க (BSF Recruitment 2024) 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பணிக்கேற்ற கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

  • வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • ஊதிய விவரம் : இந்த வேலைக்கு மாத சம்பளமாக ரூ.21,700 – 92,300 வரை வழங்கப்படும்.

  • தேர்வு செய்யும் முறை : இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முதலில் ஆஃப்லைன் எழுத்துத் தேர்வு இருக்கும். பின்னர் உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

  • விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://rectt.bsf.gov.in/#bsf-current-openings என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 18/07/2024

Latest Slideshows

Leave a Reply