Bumrah Becomes No 1 Bowler : ஐசிசி பவுலிங் தரவரிசை | முதலிடம் பிடித்து பும்ரா சாதனை

மும்பை :

ஐசிசியின் பந்துவீச்சு தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவங்களிலும் முதலிடம் பிடித்து, இந்திய அணியின் பும்ரா (Bumrah Becomes No 1 Bowler) நிகரற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், 2 வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்டநாயகன் (Bumrah Becomes No 1 Bowler) விருதையும் பெற்றார்.

ஜஸ்பிரித் பும்ரா :

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் சிறந்த பந்து வீச்சாளராக இருக்கிறாரோ அதுபோல இந்திய அணியில் பும்ரா திகழ்வார் என அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் பாராட்டினார். நவீன கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்விங் கலை இல்லாத சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும், இந்திய மைதானங்களிலும் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் மேஜிக் செய்தார் பும்ரா. இம்ரான் கான், வாக்கர் யூனிஸ், சோயப் அக்தர், ஜாகீர் கான் ஆகியோரைத் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங் கலையில் பும்ரா நன்கு தேர்ச்சி பெற்றவர். இதன் மூலம், கடந்த 100 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சராசரியை பும்ரா பெற்றுள்ளார். 34 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

Bumrah Becomes No 1 Bowler - 150 விக்கெட்டுகள் :

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், சர்வதேச வீரர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா முதலிடத்திற்கு (Bumrah Becomes No 1 Bowler) முன்னேறியுள்ளார். அதேபோல் முதலிடத்தில் இருந்த அஷ்வின் 2 இடங்கள் சரிந்து 3 வது இடத்திற்கு வந்துள்ளார். அதேபோல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதன்முறையாக ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் (Bumrah Becomes No 1 Bowler) பிடித்துள்ளார். முன்னதாக, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் இருந்தார். இதன் மூலம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடத்தை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply