C295 Aircraft : இந்திய விமான படையிடம் ஒப்படைக்கப்பட்டது...

நம் இந்திய விமானப்படைக்காக தயாரிக்கப்பட்ட முதல் ‘சி295’ போக்குவரத்து விமானத்தை (C295 Aircraft) நம் இந்திய விமான படையினரிடம் ‘ஏர் பஸ்’ நிறுவனம் நேற்று ஒப்படைத்தது. நம் விமானப்படை வீரர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து உட்பட பல்வேறு பணிகளுக்காக இன்று வரை ‘ஏவ்ரோ 748’ என்ற விமானங்கள்தான் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன.

இந்த ‘ஏவ்ரோ 748’ விமானங்களை நீக்கிவிட்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயினை சேர்ந்த ‘ஏர் பஸ்’ நிறுவன தயாரிப்பான ‘சி295’ விமானங்களை (C295 Aircraft) வாங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக மட்டும் 21,935 கோடி ரூபாய் செலவில் ‘சி295’ ரக 56 விமானங்களை வாங்க ‘ஏர் பஸ்’ நிறுவனத்துடன்  மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

C295 Aircraft - "சி295" ரக விமானம் தயாரிப்பு :

ஸ்பெயின் நாட்டிலுள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் ‘ஏர்பஸ் சி-295’ ரக போர் விமானங்களைத் (C295 Aircraft) தயாரிக்க இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 முதல் விமானத்தின் (C295 Aircraft) வெள்ளோட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

கடந்த மே மாதம் 5-ம் தேதி ஸ்பெயின் செவில் நகரில் காலை 11.45 மணிக்கு பறக்கத் தொடங்கிய சி-295 ரக விமானம் (C295 Aircraft) தொடர்ந்து 3 மணி நேரம் விண்ணில் பறந்து பிற்பகல் 2.45 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனை அடுத்து ‘சி295’ விமானம் அனைத்து விதமான பரிசோதனைகளிலும் வெற்றியடைந்தது. இந்நிலையில் முதல் கட்டமாக இந்தியாவிடம் அந்நிறுவனம் ‘சி295’ விமானத்தை ஒப்படைத்தது.

"சி295" ரக விமானம் ஒப்படைப்பு :

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் சவில் நகரில் உள்ள ‘ஏர் பஸ்’ விமான தயாரிப்பு மையத்தில் தயாரான முதல் ‘சி295’ போக்குவரத்து விமானத்தை நம் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி திரு.வி.ஆர்.சவுத்ரி நேற்று பெற்றுக்கொண்டார்.

இந்திய விமானப் படையில் தற்போது இருக்கும் ‘ஏவ்ரோ 748’ ரக விமானங்களுக்கு மாற்றாக சி-295 ஏர்பஸ் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஸ்பெயினில் தயாராகும் முதல் 16 விமானங்கள் 2025-ம் ஆண்டுக்குள் நம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும். மீதம் இருக்கும் 40 விமானங்கள் குஜராத்தின் நகரில் உள்ள வதோதராவில் தயாராகி வரும் ‘டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ்’ என்ற தொழிற்சாலையில் எஞ்சிய விமானங்கள் தயாரிக்கப்படும். இதை ‘டாடா நிறுவனம்’ மற்றும் ஸ்பெயினின் ‘ஏர் பஸ்’ நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தயாரிக்க உள்ளதகாவும் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply