Cabinet Approves One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையானது இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் (Cabinet Approves One Nation One Election) தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்காலக் கூட்டத்தொடர்

குளிர்கால கூட்டத்தொடரானது கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு இதுவரை 16 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் (Cabinet Approves One Nation One Election) அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதாவை விரைவில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த கூடாது என நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தலைவர் தலைமையில் மூவர் குழு (Cabinet Approves One Nation One Election)

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு (Cabinet Approves One Nation One Election) அமைக்கப்பட்டது. இந்த குழு தற்போது அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் இந்திய அரசமைப்பின் 3 பிரிவுகளிலும் மற்றும் 12 உப பிரிவுகளிலும் திருத்தும் செய்வதற்கு பரிந்துரை செய்தது. மேலும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்கள் சட்டங்களிலும் திருத்தும் செய்ய பரிந்துரை செய்தது.

தற்போது இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மூன்று சட்டங்களை அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1.இதில் முதல் சட்டமாக மக்களவை தேர்தலும், சட்டப்பேரவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு அரசமைப்பில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
2.இரண்டாவது சட்டமாக மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தல்களை இணைந்து நடத்துவதற்கு வசதி செய்யும் அரசமைப்புத் திருத்தச் சட்டம் செய்யப்படவுள்ளது.
3.மூன்றாவது சட்டமாக டெல்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் சட்டப்பேரவைகளுக்கான பதவி காலத்தை மாற்றுவதற்கு ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply