Calcium Rich Foods in Tamil: கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்

நாம் சாப்பிடும் உணவுகளில் மைதா உணவுகள் எண்ணெய் பொருட்கள், குளிர்பானங்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை குறைத்துக்கொண்டு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளையும் நோய்களை தீர்க்கும் மூலிகைகளையும் எடுத்துக் கொண்டு வந்தால் ஆயுள் முழுவதும் எந்த நோயும் நெருங்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அன்றாட உணவுகளில் உடலுக்கு தேவையான சத்தை சரியான விகிதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.   நம் உடலில் இயற்கையாகவே கால்சியம், மெக்னிசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற மாக்ரோ மினரல்ஸ் நம் உடலில் இருக்கிறது. இதில் கால்சியம் 99% நம் உடலில் எலும்புகளிலும், பற்களிலும் இருக்கிறது. மீதமுள்ள 1% கால்சியம் இரத்தத்தில், தசைகளில், இதயம் மற்றும் கல்லீரலில் இருக்கிறது.

இரத்தத்தின் கால்சியம் அளவு குறையும் போது அவை எலும்புகளில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. இதனால் உடலில் எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து தேவைப்படுகிறது. கால்சியம் அதிகம் நிறைந்துள்ள பொருள் பால் இதைத்தவிர வேறுவகையான சில உணவு பொருட்களிலும் கால்சியம் நிறைந்துள்ளது. அவை என்னென்னெ உணவுகள் என்று பின்வருமாறு காண்போம்.

கால்சியம் குறைபாடு அறிகுறிகள்

உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் எலும்பு தேய்மானம், மூட்டுவலி, முதுகு வலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். இது மட்டுமின்றி பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுதல், பற்கள் வலுவிழந்து இருத்தல், கால்கள் மறுத்து போதல், தசை பிடிப்பு, நகங்கள் எளிதில் உடைதல், சீரற்ற இதய துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் உடல் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படவும் இது காரணமாக இருக்கிறது. இந்த கால்சியம் குறைபாட்டை சரிசெய்ய மாத்திரைகள் மூலமாக சரிசெய்ய வேண்டும் என்றில்லாமல், நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் மிகவும் எளிமையாக கால்சியம் சத்தை உடலில் அதிகரிக்க முடியும்.

கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் (Calcium Rich Foods in Tamil List)

பாலை தவிர பால் சார்ந்த உணவுகளான தயிர், வெண்ணெய், பன்னீர், சீஸ் போன்றவைகளிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பால் குடிக்க பிடிக்காதவர்கள் பால் சார்ந்த உணவுகளை சாப்பிடலாம். இதன் மூலம் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு அதிகரிக்கும்.

கால்சியம் அதிகம் உள்ள கீரைகள்

கீரைகளில் கால்சியம் இருக்கிறது. ஒரு சில கீரைகளில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது. 

அகத்திக்கீரை: இந்த அகத்திக்கீரையில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.100 கிராம் அகத்திக்கீரையில் 1130 மில்லிகிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த கீரையை வாரம் 1 முறை சாப்பிட்டு வந்தால் போதும் கால்சியம் சத்து எளிதாக உடலுக்கு கிடைக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை: 100 கிராம் பொன்னாங்கண்ணி கீரையில் 510 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுவாக்குவது மட்டுமின்றி கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முருங்கை கீரை: அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ள கீரைகளில் ஒன்று முருங்கை கீரை. இந்த கீரை எளிமையாக கிடைக்கக் கூடியது. இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது. 100 கிராம் முருங்கள் கீரையில்  450 மில்லிகிராம் அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. எலும்பு பலவீனமாக இருப்பவர்கள், எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வருவதை தடுக்க நினைப்பவர்கள் இந்த மூன்று கீரைகளையும் மாறி மாறி சாப்பிட்டு வந்தால் ஆயுள் முழுவது எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.

எள்

எள் கருப்பு, வெள்ளை என இரண்டு வகைகளில் இருக்கிறது. இந்த இரண்டு வகை எள்ளிலுமே ஒரே அளவிலான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. எள்ளில் தயாரிக்கப்படும் எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு பர்பி போன்றவைகளை உட்கொள்ளலாம். இது போன்று எள்ளு சேர்ந்த உணவு பொருட்களை உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான கால்சியம் சத்து எளிதாகவே கிடைக்கிறது.

கேழ்வரகு

கேழ்வரகு எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரட்சனைகளினால் அவதிப் படுகிறவர்கள். காலை முதல் உணவை கேழ்வரகில் செய்த இட்லி, தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதன் மூலம் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும். எலும்பு சம்பந்தமான பிரட்சனைகளையும் தீர்க்கும்.

பாதாம்

நட்ஸ்களில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ள நட் பாதம். பாதம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி காலையில் சாப்பிட்டு வர உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். உடல் பலவீனமாக இருப்பதையும் தடுத்து உடலை பாதுகாக்கும்.  

சோயா பீன்ஸ்

பீன்ஸ் வகைகளில் சோயா பீன்ஸில் கால்சியம் நிறைந்துள்ளது. இந்த சோயா பீன்ஸை சமைத்து உணவில் சேர்த்து வர உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

மீன்

மீன் வகைகளில் மத்தி மீனில்தான் அதிக அளவில் கால்சியம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரு முறை மத்தி மீனை சாப்பிட்டு வந்தால் போதும், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்பு சார்ந்த பிரட்சனைகள் வராமல் பாதுகாக்கும்.

அத்திப்பழம்

பழங்களில் அதிகப்படியான கால்சியம் நிறைந்துள்ள பழம் அத்திப்பழம். உலர் அத்திப்பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அந்த பழத்தை சப்பிட்டு வர உடலில் கால்சியம் சத்து எளிதில் அதிகரிக்கும்.

வெண்டைக்காய்

காய் வகைகளில் வெண்டை காயில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதுமட்டுமின்றி  வெண்டைக்காயில் வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இது பற்களின் ஈறுகள் வளமாக இருக்கவும், எலும்புகளில் இம்ப்பிளமேஷன் உண்டாவதையும் தடுக்கும்.

முட்டை

கால்சியம் சத்து நிறைந்துள்ள அசைவ உணவுகளில் மிக முக்கியமான உணவு முட்டை. ஒரு அவித்த முட்டையில் 25 மில்லிகிராம் அளவு கால்சிய சத்து நிறைந்திருக்கிறது. எலும்பு சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் மத்திய உணவுகளில் 2 அவித்த முட்டைகளை சேர்த்து  சாப்பிட்டு வர எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் சத்து எளிதில் பெற முடியும்.

Latest Slideshows

Leave a Reply