Cambodia New Airport : கம்போடியா தனது மிகப்பெரிய விமான நிலையத்தை 16/11/2023 அன்று செயல்படுத்தியது

Cambodia New Airport :

அக்டோபர் 16 அன்று முதல் இந்த விமான நிலையம் (Cambodia New Airport) பிரபலமான சுற்றுலா தலமான அங்கோர் வாட்டிற்கு சேவை வழங்க செயல்படத் தொடங்குகிறது. இது சீன நிதியுதவி திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்பட்டது. நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான சியெம் ரீப் மாகாணத்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான அங்கோர் வாட் கோவில் வளாகத்திற்கு மேம்படுத்தப்பட்ட நுழைவாயிலாக இந்த விமான நிலையம் (Cambodia New Airport) செயல்படும். இந்த விழாவில் பேசிய Prime Minister Hun Manet பழைய விமான நிலையம் ஆனது அங்கோர் கோயில்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளது என்றும், கடந்து செல்லும் விமானங்களின் அதிர்வுகள் ஆனது அங்கோர் கோயிலின் அடித்தளத்தை சேதப்படுத்துவதாக அஞ்சுவதாகவும் கூறினார்.

மேலும் அவர் இந்த விமான நிலையத்தின் துவக்கமானது கம்போடியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள ஆழமான நட்பைக் காட்டுகிறது  மற்றும் இரு நாட்டு பொருளாதார உறவுகளை மேம்படுத்துகின்றது என்று கூறினார். கம்போடியாவின் மிக முக்கியமான கூட்டாளியாகவும் பயனாளியாகவும் சீனா உள்ளது. கம்போடியாவின் பொருளாதாரத்தில் சீனா வலுவான செல்வாக்கு பெற்றுள்ளது. பல சீன நிதியுதவி திட்டங்கள், ஹோட்டல்கள் மற்றும் தலைநகர் புனோம் பென் மற்றும் நாடு முழுவதும் உள்ள கேசினோக்களால் இது காட்டப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டின் 10 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனில் 40%க்கும் அதிகமானவை சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளன. கம்போடியாவின் அரசு வங்கிகள் விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு சீனக் கடன்களைக் கொண்டு நிதியளிக்கப்பட்டுள்ளன.

கம்போடியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சுற்றுலா :

சீன அரசாங்கத்திற்காக யுன்னான் கவர்னர் வாங் யூபோ பேசுகையில் சுற்றுலா ஆனது கம்போடியாவின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் முக்கிய தூண்களில் ஒன்றாகும். சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் கம்போடியா சுமார் 3.5 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முந்தைய 2019-ஆம் ஆண்டு சுமார் 6.6 மில்லியன் வெளிநாட்டு பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இந்த விமான நிலையத்தின் குறிக்கோள்  ஆனது சீனாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா வரையிலான வர்த்தக பிற பகுதிகளுடன் சீனாவின் தொடர்புகளை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை வளர்ப்பது ஆகும்.

சுமார் $1.1 பில்லியன் செலவில் இந்த புதிய விமான நிலையம் (Cambodia New Airport) கட்டப்பட்டுள்ளது. சீனாவின் யுன்னான் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உடன் இணைந்த அங்கோர் சர்வதேச விமான நிலையம் லிமிடெட் மூலம் 55 ஆண்டு கட்ட-இயக்க-பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய திட்டம் ஆனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். சீன மேம்பாட்டு வங்கிக் கடன்களின் மூலம்  சீன நிறுவனங்கள் ஆனது வெளிநாடுகளில் போக்குவரத்து, ஆற்றல் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கிய ஒரு லட்சியத் திட்டமாகும்.

சீம் ரீப்-அங்கோர் சர்வதேச விமான நிலையம் ஆனது அங்கோர் வாட்டின் கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது மற்றும் 3,600-மீட்டர் நீளமான ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஆனது ஆண்டுக்கு 7 மில்லியன் பயணிகளைக் கையாளும் மற்றும் 2040 முதல் ஆண்டுதோறும் 12 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் அதிகரிக்கும் விதத்தில்  திட்டமிடப்பட்டுள்ளது. இது சீனாவின் நிதியுதவி திட்டமானது நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான சீம் ரீப்பின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான அங்கோர் வாட் கோவில் வளாகத்திற்கு மேம்படுத்தப்பட்ட நுழைவாயிலாக செயல்படுகிறது.

தலைநகருக்கு சேவை செய்வதற்காக மற்றொரு விமான நிலையம் ஆனது $1.5 பில்லியன் செலவில் சீனாவின் நிதியுதவியுடன் கட்டப்படுகிறது. 2,600 ஹெக்டேரில் (6,425 ஏக்கர்) அமைய உள்ள இந்த விமான நிலையம் ஆனது புனோம் பென் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும். இந்த புனோம் பென் சர்வதேச விமான நிலையம் ஆனது  2024 இல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. “2024-ஆம் ஆண்டு ஆனது  நம்முடைய சீம் ரீப் மாகாணத்தில் சுற்றுலாத் துறையின் முன்னேற்றம் மற்றும் மறுபிறப்பின் தொடக்கத்தின் ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்று ஹன் மானெட் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply