Canara Bank Recruitment 2024 : 3000 Apprentices காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியின் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இந்த வங்கியின் கிளைகள் உள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகள் சேர்த்து மொத்தம் 9,600 கிளைகளுடன் கனரா வங்கி இயங்கி வருகிறது. ஐபிபிஎஸ் Institute Of Banking Personnel Selection (IBPS) மூலமாக கனரா வங்கிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 3,000 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை (Canara Bank Recruitment 2024) நிரப்ப அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
Canara Bank Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியா முழுவதும் உள்ள கனரா வங்கியில் அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 3,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும் இந்த அறிவிப்பில் தமிழகத்திற்கு மட்டும் 350 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- கல்வித் தகுதி (Educational Qualification) : கனரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயதுத் தகுதி (Age) : கனரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : கனரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : கனரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் மத்திய அரசின் அப்ரண்டிஸ்ஷிப் இணையதளத்தில் https://nats.education.gov.in/ பதிவு செய்ய வேண்டும். பிறகு கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : கனரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : கனரா வங்கியில் இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கு (Canara Bank Recruitment 2024) செப்டம்பர் 21 தேதி முதல் அக்டோபர் 14 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்கள் அறிய : https://canarabank.com/UploadedFiles/Pdf/APPRENTICESHIP_ADVERTISEMENT_COMBINED.pdf என்ற அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்