Canara Bank Revised FD Rates : கனரா வங்கி நிலையான வைப்புகளுக்கு வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி (Canara Bank) நிலையான வைப்பு (Fixed Deposit) விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டணங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.3 கோடிக்கு குறைவான நிலையான டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தில் (Canara Bank Revised FD Rates) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வட்டி விகிதங்கள் (Canara Bank Revised FD Rates)

குறைந்தது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வைக்கப்படும் நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposit) வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 6.70 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கனரா வங்கி அதிகபட்சமாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை 7.40 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல் மூத்த குடிமக்களுக்கு கனரா வங்கியில் 7.90 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இது சராசரி வட்டி விகிதத்தை விட 0.5 சதவீதம் அதிகமாகும்.         

கனரா வங்கி (Canara Bank) ரூ.3 கோடிக்கு குறைவான நிலையான வைப்புகளுக்கு (Canara Bank Revised FD Rates) 7 முதல் 45 நாட்களுக்கு 4 சதவீதம்  வட்டி வழங்குகிறது. அதேபோல் 46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கான நிலையான டெபாசிட்களுக்கு 5.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. அதேபோல் 91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கான நிலையான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 5.50 சதவீதம் வழங்குகிறது. மேலும் 180 நாட்கள் முதல் 269 நாட்களுக்கான முதிர்ச்சியடையும் நிலையான டெபாசிட்களுக்கு 6.15 சதவீதம் வட்டி வழங்குகிறது. அதேபோல் 270 நாட்கள் முதல் 1 வருட காலத்திற்கு நிலையான டெபாசிட்களுக்கு வட்டி விகிதமானது 6.25 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும் 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கான நிலையான டெபாசிட்களுக்கு 6.85 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான நிலையான டெபாசிட்களுக்கு கனரா வங்கியில் 7.20 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதேபோல் 3 வருடம் முதல் 5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிலையான டெபாசிட்களுக்கு 7.40 சதவீதம் வழங்கப்படுகிறது.           

கனரா வங்கியில் பிரிவு 80C-யை பயன்படுத்தி ரூ.1.50 லட்சம் வரையில் நிலையான டெபாசிட் செய்பவர்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதங்களை குறைத்தால் மட்டுமே கனரா வங்கியும் FD விகிதங்களை குறைக்கும். வரும் காலங்களில் அதிக வட்டி பெற விரும்பும் நபர்கள் வங்கிகளில் நிலையான டெபாசிட்களில் (Fixed Deposit) முதலீடு செய்தால் நல்ல பலனை பெறலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply