Canes Film Festival-ல் பார்வையாளர்களின் 8 நிமிடங்கள் கைத்தட்டல் பாராட்டு

Canes Film Festival-ல் பார்வையாளர்களின் 8 நிமிடங்கள் கைத்தட்டல் பாராட்டு பெற்றது இந்திய திரைப்படம்

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பாயல் கபாடியாவின் புதிய திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ திரைப்படம் Canes Film Festival-ல் பார்வையாளர்களின் 8 நிமிடங்கள் கைத்தட்டல் பாராட்டை பெற்றது. ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ திரைப்படம் நடுவர் குழு (ஜூரி) விருதை வென்றுள்ளது.

முதல் முறையாக கடந்த 30 வருடங்களில் கேன்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவில் இந்தியத் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆனது மும்பைக்கு பணிக்காக புலம்பெயர்ந்த பெண்களின் கதையைப் பேசுகிறது. இயக்குநர் பாயல் கபாடியா மும்பையின் இதயத் துடிப்பாக விளங்கும், புலம்பெயர்ந்த மக்களின் குரல்களைத் தனது திரை மூலம் ஒலிக்கச் செய்திருக்கிறார். 38 வயதான இயக்குநர் பாயல் கபாடியாவை இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டு முடிந்த பிறகு அங்கிருந்தவர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு அந்தப் படத்தின் இயக்குநருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை மற்றும் பெரும் சாதனை ஆகும். இந்திய நாட்டுக்கு Canes Film Festival-ன் முக்கிய விருதுகளில் ஒன்று கிடைத்துள்ளது.

இந்தப் படம் பல தரப்பில் இருந்தும் சிறந்த விமர்சனங்கள் மற்றும் நல்ல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு தி கார்டியன் பத்திரிகை ஆனது ஐந்து நட்சத்திரம் வழங்கி, இது ஒரு “தனித்துவமான மற்றும் மனிதநேயம் நிறைந்த ஒரு கதை” என்று தனது மதிப்பாய்வில் இந்தப் படத்தை விவரித்துள்ளது. இது படத் தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே கிடைத்த முக்கியமான சாதனை ஆகும். சிறந்த விமர்சனங்கள் மற்றும் நல்ல பாராட்டுகளைப் இந்தப் படம் பல தரப்பில் இருந்தும் பெற்றுள்ளது. மீரா நாயரின் சலாம் பாம்பே திரைப்படம் ‘கேமரா டோர்’ என்ற விருதை  கடந்த 1988 ஆம் ஆண்டில் நடந்த Canes Film Festival-ல் வென்றது.

Latest Slideshows

Leave a Reply