Cantilever Technology : புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன Cantilever தொழில்நுட்பம்

இந்தியாவில் கடல் மீது 1914 ஆம் ஆண்டு பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்தியாவில் கடல் மீது கட்டப்பட்ட முதல் ரயில்வே பாலமான பாம்பன் பாலம் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அந்த பாலத்திற்கு பக்கத்திலேயே புதிய ரயில்வே பாலம் (Cantilever Technology) கட்டப்பட்டு வருகின்றது. அந்த பழைய பாலத்திற்கு மாற்றாக பக்கத்திலேயே கட்டப்பட்டு வரும் புதிய ரயில்வே பாலத்தில் சில அதிநவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ரயில் போக்குவரத்தை மேலும் எளிமையாக்கப்போகிறது. 

ஆங்கிலேயர்கள் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையுடனான இந்திய வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகளை ஆய்வு செய்தனர். அதன் விளைவாக 1870 ஆம் ஆண்டு இந்திய நிலப்பகுதியுடன் பாம்பன் தீவை இணைக்கும் பாலத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. கடல் மட்டத்திலிருந்து 41 அடி உயரத்தில் 2.2 கிமீ நீளத்தில் 143 தூண்களை கொண்ட பாம்பன் பாலத்திற்கான கட்டுமான பணிகள் 1911 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு முடிவடைந்தது. 1914 ஆம் ஆண்டு முதல் இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பாலத்திற்கு நடுவே கப்பல் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலம்தான் இந்த பாலத்தின் சிறப்பம்சம். 

இந்த பாலத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 10 கப்பல்கள் வரை இந்த பாதையை கடந்து செல்கின்றன. இந்த பாலம் கடந்த (Cantilever Technology) காலங்களில் பல்வேறு சேதங்களையும் பராமரிப்பு பணிகளையும் கண்டிருக்கிறது. பாம்பன் பாலத்தை 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் பெரிய அளவில் சேதப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலத்தின் சில தூண்கள் 2013 ஆம் ஆண்டு கப்பல் மோதியதால் சேதமடைந்தன. பாலத்தின் தூண்களில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக விரிசல் ஏற்பட தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான  மானியக் கோரிக்கைகளின் கீழ் புதிய பாலம் கட்டும் அறிவிப்பை வெளியிட்டது.  

புதிய பாம்பன் பாலம்

Cantilever Technology - Platform Tamil

புதிய பாலத்தின் கட்டுமான பணிகளுக்காக 280 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் பாலம் கட்டி முடிக்கும்போது இதற்கான செலவு ரூ.580 கோடியை (Cantilever Technology) எட்டிவிட்டது. 2020 ஆம் ஆண்டு 2.1 கி.மீ நீளம் மற்றும் 101 காங்கிரீட் தூண்களைக் கொண்ட புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. பழைய பாலத்தை விட 3 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தின் நடுவே 72 மீட்டருக்கு கப்பல்களுக்கு வழிவிட அதிநவீன செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பரில் இதற்கான சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.

புதிய பாம்பன் பாலம் லண்டனில் உள்ள டவர் பாலத்தை அடிப்படையாகக் கொண்டு  1,470 மெட்ரிக் டன் எடையில் கட்டப்பட்டுள்ளது. புதிய பாம்பன் பாலத்தில் கனமான ரயில் போக்குவரத்தையும் வேகமான ரயில்களையும் தாங்கும் வகையில் 5,800 மெட்ரிக் டன் துருப்பிடிக்காத எஃகு மற்றும் 3,40,000 பைகள் சிமென்ட் (Cantilever Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக 75 கி.மீ வேகத்தில் இந்த பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு அதில் மாற்றங்கள் வரலாம். எதிர்காலத்தில் இரட்டை தண்டவாளங்கள் அமைக்க மற்றும் மின்சார வழித்தடங்கள் ஏற்படுத்தும் வகையில் இப்போதே தூண்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Cantilever Technology தொழில்நுட்பம்

இந்த பாலத்தில் அதிநவீன கான்டிலீவர் (Cantilever Technology) தொழில்நுட்பத்துடன் கப்பல் கடந்து செல்லக்கூடிய தூக்குப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் கப்பல் செல்ல வழிவிடுவதற்காக ஒவ்வொரு முறையும் பாலம் இரண்டாக பிரிய 1.5 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். இதற்காக 16 நபர்கள் 2 பக்கமும் பயன்படுத்தப்படுவார்கள். ரயில்கள் மற்றும் கப்பல்கள் இதற்காக நீண்ட நேரம் காத்திருப்பது மட்டுமல்லாமல், பெரும் மனித உழைப்பும் தேவைப்பட்டது.

ஆனால் அதிநவீன கான்டிலீவர் (Cantilever) தொழில்நுட்பத்தில் உள்ள இந்த பாலத்தில் தானியங்கி முறையில் செயல்பட்டு வெறும் 5 நிமிடங்கள் 3 வினாடிகளில் பாலம் தூக்கப்படும். 660 மெட்ரிக் டன் எடை கொண்டதாக இந்த தூக்கும் பகுதி உள்ளது. பாலத்தை திறந்து மூட ஒட்டுமொத்தமாக 10 நிமிடங்கள் (Cantilever Technology) மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. CCTV கேமராக்கள் மூலம் பாலம் திறக்கப்படும் ஒட்டுமொத்த நடவடிக்கையும் கண்காணிக்கப்படும். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க சைரன் அடிக்கும் வழிமுறைகளும் பின்பற்றப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply