CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மத்திய அரசின் குடிமை பணிகளான ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஆர்எஸ் (IRS), ஐஎப்எஸ் (IFS) போன்ற பல்வேறு உயரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை மேற்கோள்கிறது. அந்த வகையில் தற்போது மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணியிடங்களை நிரப்புவதற்கான (CAPF Notification 2025) அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

CAPF Notification 2025

1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி கமாண்டண்ட்  (Assistant Commandant) பணியிடங்களை (CAPF Notification 2025) நிரப்புவதற்கு மொத்தம் 357 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.கல்வி தகுதி (Educational Qualification)

இந்த உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (UG) பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.வயது தகுதி (Age)

இந்த உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு மார்ச் 1, 2025 தேதி வரை 20 வயது முதல் 25 வயதிற்குள் (CAPF Notification 2025) இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.சம்பளம் (Salary)

மத்திய பாதுகாப்பு படையில் இந்த உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.56000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAPF Notification 2025 - Platform Tamil

5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் (CAPF Notification 2025) தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், எழுத்து தேர்வானது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் எனவும், தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)

மத்திய பாதுகாப்பு படையில் இந்த உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர்க்கு ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

இந்த உதவி கமாண்டண்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு வரும் 25.03.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Slideshows

Leave a Reply