Captain Fatima Wasim உயரமான போர் பகுதியில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி

இமயமலையில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான போர் பகுதியான சியாச்சின் மலைப்பகுதியில், முதல் பெண் மருத்துவ அதிகாரியாக Captain Fatima Wasim எனும் வீராங்கனை நியமிக்கப்பட்டுள்ளார். சியாச்சின் ஆனது உலகிலேயே மிக உயரமான போர் பகுதி ஆகும். இமயமலையில் அமைந்துள்ள சியாச்சின் என்ற பகுதி ஆனது கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,632 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சீனாவும், பாகிஸ்தானும் இந்த சியாச்சின் பகுதி ஆக்கிரமிக்க முயன்று வருகின்றனர். இதன்  காரணமாக இந்திய ராணுவம் ஆனது 24 மணி நேரமும் இந்த சியாச்சின் இடத்தை பாதுகாத்து வருகின்றது. இந்த சியாச்சின் பகுதியில் குளிர் அதிகபட்சமாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்  என்பதால், அங்கே உயிர் வாழ்வதே மிகக் கடினம் ஆகும் . உயிர் வாழவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய  நிலையிலும் இந்த இடத்தில் ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Captain Fatima Wasim - கடினங்கள் நிறைந்த இந்த சியாச்சின் பகுதியில் பெண் அதிகாரிகள் நியமனம் :

Captain Fatima Wasim : இவ்வளவு கடினங்கள் நிறைந்த இந்த சியாச்சின் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு பணிக்காக பெண் ராணுவ அதிகாரி முதல் முறையாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் ஆனது இந்திய ராணுவத்தில் பெண் வீராங்கனைகளுக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக மற்றொரு பெண் அதிகாரி Captain Fatima Wasim மருத்துவ அதிகாரியாக சியாச்சினில் தற்போது பொறுப்பேற்றிருக்கிறார். சியாச்சினில் மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்ற முதல் பெண் வீராங்கனை என்கிற பெருமையை இதன் மூலம்  Captain Fatima Wasim பெற்றிருக்கிறார். இந்திய ராணுவம் தனது x சோஷியல் மீடியா தளத்தில் இதனை பதிவிட்டு உறுதி செய்திருக்கிறது

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு உறைபனி பாதிப்புகள் ஏற்படும் :

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு உறைபனி பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சியாச்சினில் அதிகம். சியாச்சின் பகுதியில் வீரர்களுக்கு உறைபனி பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும். அதாவது அவர்கள் அணிந்து இருக்கும்  ஷூவுக்குள் (Shoe) பனி சென்றுவிட்டால், அல்லது அவர்கள் ஷூ இல்லாமல் பனியை மிதிக்க நேர்ந்தால் இந்த பாதிப்பு ஆனது ஏற்படும். இதனால் அவர்களது கை, கால்கள் உணர்வற்று போகும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் மற்றும் உயிர் போகும் நிலை கூட ஏற்படும்.

தற்போது பனி காலம் என்பதால், ஊடுருவல் ஆனது அடிக்கடி நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய அவசியம் ஆனது இருக்கிறது. வீரர்கள் உயிர்வாழ்தல் மற்றும் எதிரிகளை எதிர்கொள்ளுதல் என இரண்டு சவால்களையும் சியாச்சினில்  வெற்றிகரமாக செய்து வருகின்றனர். இந்த அளவுக்கு சவால்கள் நிறைந்த சியாச்சினில் பெண் வீராங்கனைகள் பணிக்கு அமர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சியாச்சினில் மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள வீராங்கனை ஃபாத்திமா வசிமுக்கு வாழ்த்துகள் ஆனது குவிந்து வருகின்றன. இந்த நிகழ்வு ஆனது பெண்கள் இனி எல்லா துறையிலும் சாதித்துக் காட்டுவார்கள் என்பதனை பறைசாற்றும் வகையில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply