Captain Miller Censor Report : கேப்டன் மில்லர் படத்தின் 4 நிமிட காட்சி ரத்து

கேப்டன் மில்லர் படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் ஆகும். கேப்டன் மில்லர் படத்தில் அதிகப்படியான வன்முறைகள் இருப்பதால், படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகள் (Captain Miller Censor Report) நீக்கப்பட்டுள்ளன. 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் , நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகியுள்ள உள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால்  நிறைந்திருக்கும். 1930 முதல் 40 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதை என்றும் தனிமனித சுதந்திரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், ஒரு சாதாரண மனிதன் எப்படி போராளியாக மாறுகிறார் என்பதே இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்று தெரிவித்திருந்தார்.

Captain Miller Censor Report - 4 நிமிட காட்சி ரத்து :

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் மொத்த ரன் நேரம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் ஆகும். ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் அதை நீக்குமாறு தணிக்கை குழு (Captain Miller Censor Report) கூறியுள்ளது. இதனால், கேப்டன் மில்லர் படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக (Captain Miller Censor Report) கூறப்படுகிறது.

முன்னதாக, லியோவில் வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகள் கூறும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால், அவற்றை நீக்குமாறு தணிக்கைக் குழு கூறியிருந்தது. இதனால் லியோ படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் ராசாவே உன்னை காணாத நெஞ்சு என்ற பாடலை பாடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply