Captain Miller First Week Box Office Collection : தனுஷின் கேப்டன் மில்லர் முதல் வார வசூல்?

தனுஷ் நடிப்பில், ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் வாரத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது (Captain Miller First Week Box Office Collection) என்று பார்ப்போம்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ராக்கி மற்றும் சாணி காயிதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மூன்றாவதாக, கோலிவுட்டின் முன்னணி நடிகரான தனுஷின் கேப்டன் மில்லர் என்ற படத்தை எடுத்துள்ளார். அவரது முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள், துப்பாக்கி குண்டு சத்தம் என படம் முழுக்க இருந்தது. தனுஷின் கேப்டன் மில்லர் ஹிட் என்றே சொல்ல வேண்டும். இதில் தனுஷ் மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கிறார். தனுஷ் ஈசன் என்ற கதாபாத்திரத்திலும், அவரது சகோதரர் சோங்கோலன் வேடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். சாதிய ஒடுக்குமுறையால் அவமானப்படுத்தப்பட்ட தனுஷ், மரியாதைக்காக பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைகிறார். ஆனால் ஆங்கிலேய ராணுவம் தனது கிராம மக்களையே கொன்றுவிடும்படி கட்டளையிடுகிறது.

தன் கைகளில் ரத்தக்கறை படிந்திருப்பதை நினைத்து,  தனுஷ் அதற்கெல்லாம் காரணமான பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியை கொன்றுவிட்டு பிரிட்டிஷ் ராணுவத்தை விட்டு வெளியேறுகிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். ஜெயிலரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிவராஜ் குமார் இந்தப் படத்திலும் கலக்கியிருக்கிறார். படத்தைப் பார்த்த ரசிகர்கள், தனுஷின் அண்ணனாக சிவராஜ்குமார் தான் சரியான தேர்வு என்றும், இன்னும் சில காட்சிகள் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர். சகோதரர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக சண்டையிட்டாலும், அவர்கள் ஒன்றாக இணையும்போது, கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

Captain Miller First Week Box Office Collection :

கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில், இப்படம் முதல் நாளில் ரூ.8.65 கோடி வசூலித்துள்ளது. தொடர் விடுமுறை என்பதால் படம் ஓரளவுக்கு வசூலை அள்ளியது. ஆனால், பொங்கல் விடுமுறைக்கு பிறகு நேற்று வேலை நாள் என்பதால் படம் ரூ.1.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் மொத்த வசூல் ரூ.40.36 கோடியாக (Captain Miller First Week Box Office Collection) உள்ளது. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் முதல் வாரத்திலேயே மோசமான (Captain Miller First Week Box Office Collection) வசூலை பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply