Captain Miller Movie Dubbing : கேப்டன் மில்லர் டப்பிங்கை துவங்கிய பிரியங்கா மோகன்

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் மற்றும் பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கேப்டன் மில்லர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த நிலையில், படத்தில் சில வேலைகள் முடிவடையாமல் இருந்த நிலையில் இப்படம் டிசம்பர் 15-ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் அண்ணனாக நடித்துள்ள சிவராஜ்குமார் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 3 கோடி பார்வைகளை கடந்து ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது.

Captain Miller Movie Dubbing - டப்பிங்கில் பிசியான பிரியங்கா மோகன் :

Captain Miller Movie Dubbing : சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரியங்கா மோகன் தற்போது படத்தின் டப்பிங் வேலைகளில் (Captain Miller Movie Dubbing) ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் சுதந்திரப் போராட்ட காலகட்டம் தொடர்பான கதையாக உருவாகி வருகிறது. ஏற்கனவே இதனுடைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் :

வழக்கமாக ஒரு படத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுக்கும் நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து 10 மாத கால்ஷீட் கொடுத்ததாக தகவல் வெளியாகின. இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டார். இதனை அடுத்து இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, ​​தனுஷ் தனது இயக்கத்தில் நடித்து வருவாகி வரும் D50 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் நிலையில், அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய D51 படத்தின் சூட்டிங்கில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் அடுத்து பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் அவரது பயணம் தொடங்கி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply