Captain Miller Movie Review : கேப்டன் மில்லர் படத்தின் திரைவிமர்சனம்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். கேப்டன் மில்லர் திரைப்படம் தனுஷின் கேரியரில் ஒரு முக்கியமான படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவர் நடிக்கும் கேரக்டராக மாறியுள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படக்குழுவினர் தற்போது விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து பேட்டிகள் மற்றும் இதர பணிகள் நடந்து வந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 6 ஆம் தேதி வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ் தனது மகன்களுடன் நிகழ்ச்சியின் மையத்தில் இருந்தார். நிகழ்ச்சியில் தனுஷ் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பல விஷயங்களைப் பேசினார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய மூன்றாவது படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்திற்காக தனுஷ் நிறைய மெனக்கெடல்கள் செய்துள்ளார். சுதந்திரப் போராட்ட காலத்தை மையமாக வைத்து மிகவும் உணர்ச்சிகரமான கதையம்சம் கொண்ட படமாக கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஜனவரி 12) வெளியாகியுள்ளது.

Captain Miller Movie Review :

தனுஷ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக அமைந்துள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி என்றாலும், கேப்டன் மில்லர் ஏற்கனவே பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் முதல் காட்சி முடிந்துவிட்டது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படம் குறித்து ட்விட்டரில் தங்களது விமர்சனங்களை (Captain Miller Movie Review) தெரிவித்து வருகின்றனர். அதன்படி, பெரும்பாலும் கேப்டன் மில்லருக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்தப் படம் தனுஷின் கேரியரில் ஆக்ஷன் பிளாக்பஸ்டர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. தனுஷின் இன்ட்ரோ சீன் முதல் க்ளைமாக்ஸ் வரை பல கூஸ்பம்ஸ் காட்சிகள் இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.

Captain Miller Movie Review : பீரியட் ஜானரில் உருவாகியிருக்கும் கேப்டன் மில்லரின் கதை 1930-களில் நடப்பதை போல் உருவாகியுள்ளது.  செட்டிங் மற்றும் சினிமோட்டோகிராபி இரண்டுமே பீரியட் ஜானர் படத்திற்கான உயிரோட்டமாக அமைந்துள்ளது எனவும், ஜி.வி.பிரகாஷின் பிஜிஎம் வேற லெவல் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். கேப்டன் மில்லரின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஆக்ஷன் நிறைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கடைசி 30 நிமிட ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் படத்தை நினைவுபடுத்தும் வகையில் படமாக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். கேப்டன் மில்லர் தனுஷுக்கு லைஃப் டைம்  செட்டில்மென்ட் படம் என்பதால், பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் அடிக்கும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை (Captain Miller Movie Review) பெற்றுள்ள கேப்டன் மில்லர் முதல் நாளில் 30 முதல் 40 கோடி வரை வசூல் செய்யக்கூடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply