Captain Miller Release Date Announcement : கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். அவரது முந்தைய வெளியீடுகளான ராக்கி மற்றும் சாணி காயிதம் படங்கள் அதிகமான கவனிப்பை பெற்றுள்ள நிலையில், குறிப்பாக தனது படங்களுக்கு அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் கொடுக்கும் தனுஷ், இந்தப் படத்துக்காக 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்து தன் கெட்டப்பை மாற்றிக் கொண்டு நடித்திருந்தார்.

Captain Miller Release Date Announcement : சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டீசரில் தனுஷ் மற்றும் சிவராஜ்குமாரின் அட்டகாசமான நடிப்பைக் காண முடிந்தது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி (Captain Miller Release Date Announcement) அறிவிக்கப்பட்டுள்ளது.

Captain Miller Release Date Announcement :

Captain Miller Release Date Announcement : இந்நிலையில் இப்படம் பொங்கலை ஒட்டி, வரும் ஜனவரி 12ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தில் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது என்றும், ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது போல் கேப்டன் மில்லர் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் அடுத்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் பேச்சை கேட்க ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது, ஐமேக்ஸ் திரையரங்கில் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் என்றும் கேரளாவில் பார்ச்சூன் சினிமாஸ் மூலம் வெளியிடப்படும் என்றும் அப்டேட் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்தியில் வெளியீட்டு உரிமையை ஜி டெலிபிலிம்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply