Captain Miller Teaser Release Date: கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு...

Captain Miller Teaser Release Date :

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளைப்பியுள்ள படமாக ‘கேப்டன் மில்லர்’ உருவாகி வருகிறது. ஆக்க்ஷன் ஜானரில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதே தேதியில் அதாவது ஜூலை 28-ல் கேப்டன் மில்லர் டீசரும் வெளியாக உள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தற்போது ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். சினிமாவில் முன்னணி ஹீரோவாக வருவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரையுலகில் உச்சத்தை தொட்ட தனுஷ் தற்போது ஐஸ்வர்யாவை பிரிந்துள்ளார். மறுபுறம், தனுஷ் தனது மகன்களை மட்டுமே அடிக்கடி பார்த்து வருகிறார். முக்கியமாக விவாகரத்துக்குப் பிறகு தனுஷும் ஐஸ்வர்யாவும் ஏட்டிக்கு போட்டியாக நடந்து வருவதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை சீண்டி பார்க்கும் விதமாக தனது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுடன், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். முக்கியமாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கேப்டன் மில்லர் போஸ்டர் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த ரிலீஸ் தேதி கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசரும் அதே 28 ஆம் தேதி தான் வெளியாக இருக்கிறதாம். ஒருபக்கம் ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடந்துகொண்டிருக்கும் போது, அதனை டம்மியாக்கவே கேப்டன் மில்லர் டீசரை தனுஷ் வெளியிடுகிறார் என்று ரசிகர்கள் ஒருபுறம் கூறி வருகின்றனர். முன்னதாக உதயநிதியின் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியான அதே தேதியில், விஜய்யின் லியோ முதல் சிங்கிள் அப்டேட்டும் வெளியிடப்பட்டது. அதனால் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் பெரிதாகக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதை அறிந்த தனுஷ், அதே நாளில் கேப்டன் மில்லரின் டீசரை வெளியிட முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் முன்னாள் மாமனார், மருமகன் இருவரும் தங்களது பட நிகழ்ச்சிகள் மூலம் ஒரே நாளில் மோதப் போவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply